தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கடந்த 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 13 % அதிகம்

கடந்த 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று - ஒரே நாளில் 13 % அதிகம்

Priyadarshini R HT Tamil
Apr 07, 2023 11:56 AM IST

Corona Virus : கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,050 பேருக்கு கோவிட் தொற்று நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இது நேற்றைய அளவைவிட 13 சதவீதம் உயர்வு ஆகும். இந்தியாவின் தினசரி கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 6,000த்தை கடந்தது. இதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 28,303 ஆக உயர்ந்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவில் வெள்ளிக்கிழமை, 6,050 புதிய கோவிட் – 19 தொற்றாளர்கள் உருவாகியுள்ளார்கள். இது நேற்றைய 5,335 என்ற அளவைவிட 13 சதவீதம் கூடுதல் ஆகும். இத்தகவலை சுகாதார அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 28,303ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால், 14 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது. இதையடுத்து இந்த வைரசுக்கு இந்தியாவில் பலியோனோர் எண்ணிக்கை 5,30,943 பேர். கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 4,41,85,858 பேர் என அமைச்சகத்தின் தகவல் தெரிவிக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,334 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 2,20,66,20,700 பேருக்கு தடுப்பூசி நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் தேசியளவிலான தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்பட்டது. 

மஹாராஷ்ட்ராவில் 803 பேருக்கு புதிதாக கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இது 234 என்ற புதன்கிழமை அளவைவிட கடுமையாக உயர்ந்துள்ளது. மும்பையில் மட்டும் 216 பேருக்கு நேற்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் இறந்துவிட்டடார். அவருக்கு மூச்சுக்கோளாறு ஏற்பட்டு இறந்தாக செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தானே மற்றும் ஜல்னா மாவட்டத்தில் மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்கள் என்று மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

தேசத்தின் தலைநகர் டெல்லி மாநிலத்தில் 606 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் இருந்து இப்போது வந்துள்ள புதிய உச்சம் என்று டெல்லி அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் கோவிட் தொற்றுக்கு ஒருவர் பலியாகிவிட்டதாக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. ஆகஸ்ட் 26ம் தேதி 620 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியது பதிவாகியிருந்தது.     

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்