தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kallakurichi Hooch Tragedy:'மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்': பாஜக வலியுறுத்தல்

Kallakurichi Hooch Tragedy:'மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்': பாஜக வலியுறுத்தல்

Marimuthu M HT Tamil
Jun 22, 2024 04:44 PM IST

Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் ‘மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்’ என பாஜக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளது.

Kallakurichi Hooch Tragedy:'மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்': பாஜக வலியுறுத்தல்
Kallakurichi Hooch Tragedy:'மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும்': பாஜக வலியுறுத்தல்

Kallakurichi Hooch Tragedy: டெல்லி: தமிழகத்தில் அண்மையில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பான சம்பவத்தில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தைப் பற்றி பேசிய பாரதிய ஜனதா கட்சித் தலைமை:

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, இந்த மரணங்கள் "அரசு ஆதரவிலான படுகொலை" என்று விவரித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும் ஷெசாத் பூனாவாலா, "இதுவரை, 53 நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். அரசு ஆதரவுடன் நடந்த இந்த கொலை மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, இந்த கொடூரமான குற்றத்தின் வில்லன்களை திமுக தொடர்ந்து பாதுகாக்கிறது’’ என்று விமர்சித்தார்.

கடந்த காலங்களில் மாநிலத்தில் இதேபோன்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு, மதுபான மாஃபியாவிற்கும் திமுக தலைவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஷெசாத் பூனாவாலா கோரினார்.

இந்த சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (என்.சி.எஸ்.சி) தானாக முன்வந்து அறிந்து, இறப்புகளுக்கு யார் காரணம் என்று கேட்டு தமிழக அரசு மற்றும் மாநில காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் ஷெசாத் பூனாவாலா கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை?:

மேலும் அவர், ‘’இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக கோருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை’’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணியின் பிற கட்சிகளின் "மௌனம்" குறித்து ஷெசாத் குறிவைத்துபேசினார்.

அதேபோல், ‘’ஷெசாத் பூனாவாலா மக்களவைத் தேர்தலின் போது தலித்துகள் மற்றும் தென்னிந்தியாவைப் பற்றி பல முறை பேசிய (காங்கிரஸ் தலைவர்கள்) ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, இந்த விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதாவது, தென்னிந்தியா மீதும், பட்டியலின மக்கள் மீதும் அவர்கள் கொண்டுள்ள அக்கறை வெறும் மேலோட்டமானது’’ என விமர்சித்துப் பேசினார்.

மற்றொரு பாஜக செய்தித் தொடர்பாளர் அனில் அந்தோணி, கள்ளச்சாராய மரணத் துயரம் தொடர்பாக திமுக மற்றும் இந்தியா கூட்டணி ஆகியவற்றை அவதூறாக பேசினார்.

அமைச்சர் முத்துசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்:

மேலும் பேசிய அனில் அந்தோணி, ‘’முதலில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால், இங்கு பொறுப்பு ஒருவருக்கு மட்டும் இல்லை. மதுவிலக்கு கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் கவனித்து இருக்க வேண்டும். பா.ஜ.க. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக அறிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். அதற்காக நாங்கள் போராடுகிறோம்

தமிழக அரசாங்கத்தின் பதிலும் நடவடிக்கைகளும் மந்தமானவை. மதுபான மாஃபியாவுடன் மாநில அதிகாரத்தின் தெளிவான கூட்டு இருப்பதை இவ்விவகாரம் காட்டுகிறது’’ என்றார்.