சர்வதேச ஆண்கள் தினம்: வரலாறு, முக்கியத்துவம், கொண்டாடப் படுவதற்கான கருப்பொருள் என்ன என்பது பற்றி அறிவோமா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  சர்வதேச ஆண்கள் தினம்: வரலாறு, முக்கியத்துவம், கொண்டாடப் படுவதற்கான கருப்பொருள் என்ன என்பது பற்றி அறிவோமா?

சர்வதேச ஆண்கள் தினம்: வரலாறு, முக்கியத்துவம், கொண்டாடப் படுவதற்கான கருப்பொருள் என்ன என்பது பற்றி அறிவோமா?

Marimuthu M HT Tamil
Nov 19, 2024 09:58 AM IST

- சர்வதேச ஆண்கள் தினம்: வரலாறு, முக்கியத்துவம், கொண்டாடப்படுவதற்கான கருப்பொருள் என்ன என்பது பற்றி அறிவோமா?

சர்வதேச ஆண்கள் தினம்: வரலாறு, முக்கியத்துவம், கொண்டாடப் படுவதற்கான கருப்பொருள் என்ன என்பது பற்றி அறிவோமா?
சர்வதேச ஆண்கள் தினம்: வரலாறு, முக்கியத்துவம், கொண்டாடப் படுவதற்கான கருப்பொருள் என்ன என்பது பற்றி அறிவோமா?

சர்வதேச ஆண்கள் தினத்தின் முக்கியவத்தை, அதன் செயல்பாடுகளை அங்கீகரித்து கொண்டாடுவதற்கான வாய்ப்பாக இந்த நாள் இருக்கிறது. சர்வதேச ஆண்கள் தினம் முதல் அது கொண்டாடப்படுவதற்கான கருப்பொருள் வரை, இந்த நாளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஆண்கள் தினத்தின் கருப்பொருள்:

சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அது செவ்வாய்க்கிழமை வருகிறது. 2024ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் என்பது, "நேர்மறையான ஆண் முன்மாதிரிகள்", ஆண்களின் மன ஆரோக்கியம் பற்றிய திறந்த உரையாடல்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், ஆண்கள் செழித்து வளரக்கூடிய ஆதரவான சூழல்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறது.

சர்வதேச ஆண்கள் தினத்தின் வரலாறு:

சர்வதேச ஆண்கள் தினம் 1992ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. டிரினிடாடியன் அறிஞர் டாக்டர் ஜெரோம் டீலக்சிங், இந்த நாளை பரிந்துரை செய்தார். ஆண்களின் ஆரோக்கியம், நேர்மறையான ஆண் முன்மாதிரிகளின் முக்கியத்துவம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்ற முக்கியமான பிரச்னைகளை நிவர்த்தி செய்யும்போது ஆண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாட அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளை உருவாக்குவதே அவரது பார்வை ஆகும்.

இந்த யோசனை விரைவாக உலகளவில் எதிரொலித்து, பல்வேறு நாடுகள் கொண்டாட்டங்கள், விவாதங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் இந்த நாளுக்கான அனுசரிப்பை ஏற்றுக்கொண்டன.

சர்வதேச ஆண்கள் தினத்தின் முக்கியத்துவம்:

சர்வதேச ஆண்கள் தினம் என்பது, ஆண்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தைக் கொண்டாடுகிறது. அதேநேரத்தில் அவர்களின் நல்வாழ்வை வலியுறுத்துகிறது.

மன ஆரோக்கியம் போன்ற முக்கியமான பிரச்னைகளைப் பற்றி விவாதிக்கவும், ஒரே மாதிரியான முறைகளைப் பற்றி சவால் செய்யவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் இது ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.

நேர்மறையான ஆண் முன்மாதிரிகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதன் மூலமும், சமூக அழுத்தங்களை போக்கமுடியும் என இந்த நாள் சொல்கிறது. ஆண்களுக்கான ஆதரவு அமைப்புகளை வளர்க்கிறது. அனைவரின் பங்களிப்புகளையும் மகிழ்ச்சியையும் மதிக்கும் மிகவும் இரக்கமுள்ள உலகத்தை உருவாக்குவதே அதன் இறுதி குறிக்கோள் ஆகும்.

சர்வதேச ஆண்கள் தினத்தின் கொண்டாட்டம்:

ஆண்களின் மனநலம், பாலினப் பாத்திரங்கள் மற்றும் சமூக ஸ்டீரியோடைப்களை உரையாற்றும் கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தன்னார்வத் தொண்டு கூட்டங்கள் மற்றும் பொது பிரசாரங்கள் போன்ற சமூக நிகழ்வுகள் ஆண்களின் பங்களிப்பைப் பாராட்டுகின்றன. அதே நேரத்தில் ஆண்களின் ஆரோக்கியத்திற்கான பிரசாரங்கள், இலவச பரிசோதனைகளை வழங்குகின்றன. ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

கல்வித்திட்டங்கள் மூலம் ஆண் முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துகின்றன. இளம் பையன்களை நேர்மறையான மதிப்புகளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கின்றன. பலர் நன்றியுணர்வு செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும், தங்கள் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆண்களைப்பற்ற் பேசவும் இந்த நாளைப் பயன்படுத்துகின்றனர்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.