டேட்டிங்கில் ஆண்கள் இதைத்தான் ஆசைப்படுவார்கள்.. ரகசியத்தை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்
பெரும்பாலான ஆண்கள் டேட்டிங் செய்யும் போது பெண்களிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை நடிகை ஸ்ருதி ஹாசன் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தங்களுக்கு ஏற்ற துணையைத் தேடும் ஆண்களோ பெண்களோ தற்போது டேட்டிங் செல்வது சாதாரண ஒன்றாக மாறிவருகிறது. இந்த டேட்டிங் முறை, தனக்கு வாழ்க்கைத் துணையாக வர விரும்பும் நபர், உண்மையில் நமக்கு ஏற்றவர் தானா? நம் எண்ண ஓட்டங்களை அனுசரித்து செல்வாரா என்பதை கண்டறிய உதவுகிறது.
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் தங்கள் பழக்க வழக்கங்களையும், முக்கிய நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்வர். பின் இவர்கள் இருவருக்கும் ஒத்துப் போனால், அடுத்தகட்ட உறவுக்கு தயாராவர்.
டேட்டிங் பற்றி பேசிய ஸ்ருதி ஹாசன்
இந்த நிலையில், நடிகை, பாடகி, இசையமைப்பாளராக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் பரபர்பபான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் டிண்டர் ஸ்வைப் ரைடில் உறவுகள் மற்றும் டேட்டிங் பற்றி விவாதித்தார். அப்போது அவர், பெரும்பாலான டேட்டிங்கில் சாப்பிடும் உணவுகளுக்கு பெண்கள் தான் பணம் தரவேண்டும் என ஆண்கள் நினைக்கின்றனர். இதுதான் உண்மை.
பணம் விஷயத்தில் கவனமாக இருங்கள்
சமீபத்தில் நான் என் ஆண் நண்பர் ஒருவருடன் டேட்டிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்போது, நாங்கள் இருவரும் சாப்பிடும் உணவுகளுக்கு நான் தான் பணம் செலுத்தி வந்தேன். அவர் ஒருபோதும் பணம் செலுத்தியது இல்லை. ஒருமுறை நான் அவரிடம் இதுபற்றி கேட்டேன்.
அப்போது அவர் கூறிய பதில் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. உன்னிடம் நிறைய பணம் இருக்கிறது. அதனால் நீங்கள் எப்போதும் பணம் கொடுப்பீர்கள் என நினைத்தேன் என்றார். இந்தப் பதில் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
வழக்கமாக நமக்கு பிடித்தவருடன் நாம் வெளியில் செல்லும் போது, உங்களுக்கு என்ன வேண்டும், பரவாயில்லை நான் உங்களுக்காக பணம் தருகிறேன் எனக் கூறுவது நமது காதல் மொழி. நாம் அவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் தவறாக எடுத்துக் கொள்கின்றனர் என்றார்.
நிதிச் சுதந்திரம்
மேலும் பேசியவர், பெண்கள் அவர்களுக்கான பொருளாதாரத்தில் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால், அதை சிலர் பயன்படுத்த முயலும் போது நாம் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும்.
பெண்களின் நிதி சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு என்னிடம் ப எடுத்துக்காட்டுகள் இருக்கிறது. நாம் கொண்ட கண்மூடித்தனமான அன்பை பிறர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற பாடத்தை தற்போது கற்றுக் கொண்டுள்ளேன் என்றார். மேலும், அதுபோன்ற நபர்களை விரைவில் பிரிந்து வந்துவிடுவது முக்கியம் என்பதில் நான் தெளிவாக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்படும் ஸ்ருதி ஹாசன் கூறிய இந்தக் கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
பிஸியாக இருக்கும் ஸ்ருதி
நடிகர் கமல் ஹாசனின் மகளான இவர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படத்தில் இணைந்து நடித்து வருகிறார். அத்துடன் இயக்குநர் பிரசாந்த் நீலின் பான் இந்தியா திரைப்படமான சாலார் 2விலும் நடித்து வருகிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்