தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Suzuki Has Launched A New Variant Model Called Burgman Street Maxi Scooter Ex.

Suzuki Burgman Street EX: புதிய வேரியண்ட் வெளியிட்ட Suzuki

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 08, 2022 10:59 AM IST

சுசுகி நிறுவனம் ஸ்கூட்டர் செக்மெண்டில் Burgman Street maxi Scooter EX என்ற புதிய வேரியண்ட் மாடல் வெளியிட்டுள்ளது.

பர்க்மேன் ஸ்ட்ரீட் மாக்ஸி ஸ்கூட்டர் EX
பர்க்மேன் ஸ்ட்ரீட் மாக்ஸி ஸ்கூட்டர் EX

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் இது 22,400 ரூபாய் கூடுதல் விலையாகும். இந்த ஸ்கூட்டரில் Burgman Street Standard Edition, Burgman Street Ride Connect Edition, Burgman Street EX Edition என  மூன்று வேரியண்டுகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ள இன்ஜின் அதிக அளவு மைலேஜ் கொடுக்கக் கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் அம்சங்கள்

இந்த ஸ்கூட்டரில் Eco Performance Alpha (SEP-a) என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் EASS (Engine Auto Start Stop) என்ற ஆட்டோ ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த EASS வசதியால் அதிக நேரம் ஐடலில் இருந்தால் என்ஜின் தானாகவே நின்றுவிடும். இதில் மூன்று கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் முன்பக்க டிஸ்க் பிரேக் வசதி, விண்ட் ஸ்க்ரீன், 21.5 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி, LED ஹெட் லைட் வசதி, டைல் லைட் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் Silent Starter System, Suzuki Ride Connect, நேவிகேஷன் வசதி, USB சார்ஜிங் சாக்கெட், 2 லிட்டர் க்ளோவ் பாக்ஸ் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

IPL_Entry_Point