தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ug Neet Results 2023 : நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்களே! இன்னும் சிறிது நேரத்தில் முடிவுகள் – எப்படி தெரிந்துகொள்ளலாம்.

UG Neet Results 2023 : நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்களே! இன்னும் சிறிது நேரத்தில் முடிவுகள் – எப்படி தெரிந்துகொள்ளலாம்.

Priyadarshini R HT Tamil
Jun 13, 2023 11:55 AM IST

Neet Exam Results 2023 : இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

2019ம் ஆண்டு முதல் இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால்தான் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் பொது மருத்துவம் அல்லது பல் மருத்துவம் படிக்க முடியும்.

இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றில் இருந்தும் 45 வினாக்கள் கேட்கப்பட்டு மொத்தம் 180 வினாக்கள் இடம்பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

ஆனால் தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு மாணவர் மூன்று முறை நீட் தேர்வை எழுத முடியும். இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 வயதுக்குள் மூன்று முறையும், மற்ற மாணவர்கள் 25 வயதுக்குள் 3 முறையும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் இந்தாண்டு நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு மே மாதம் 7ம் தேதி நடைபெற்றது. 499 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டது. பலகட்ட சோதனைக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

உத்தேச விடைத்தொகுப்பு (Provisional Answer keys) தேர்வரின் OMR விடைத்தாள் மற்றும் இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகள் (Scanned Images of OMR Answer Sheet & Recorded Responses) விரைவில் தேசிய தேர்வு முகமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச விடைத் தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால், தேர்வர்கள் முகமைக்கு தெரியப்படுத்தலாம். இருப்பினும், இதற்கான செயல்முறைக்கு ஒரு விடைக்கு ரூ.200வீதம் கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். பாட வல்லுநர்களை கொண்டு குறைகள் சரிபார்க்கப்படும். குறை கண்டறியப்பட்டால், தொடர்புடைய விடைகள் மாற்றம் செய்யப்படும்.

மேலும், OMR விடைத்தாள் மற்றும் இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகள் மதிப்பீட்டில் ஏதேனும் குறைகள் இருந்தால், முகமைக்கு தேர்வர்கள் தெரியப்படுத்தலாம். ஒரு விடைக்கு ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதன்படி, விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வரின் OMR விடைத்தாள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வர்கள்www.neet.nta.nic.in என்ற இணைய தளத்தை அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று (13ம் தேதி) நண்பகலில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவத்தின் காரணமாக, அம்மாநிலத்தில் மட்டும் தனியாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதனால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய தேர்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன.

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்