தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Explainer : உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் உயர்கல்வி! தயாரா மாணவர்களே! தகுதிகள் என்ன? விவரங்கள் உள்ளே!

HT Explainer : உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் உயர்கல்வி! தயாரா மாணவர்களே! தகுதிகள் என்ன? விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil
May 02, 2023 11:18 AM IST

இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரி வழங்கும், எதிர்கால தலைவர்கள் உதவித்தொகை திட்டம், இந்திய முதுநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது. அதன் மூலம் 30 மாணவர்கள் பயன்பெற முடியும். அதில் பாதியளவுக்கு பெண்கள் இடம்பெறுவார்கள் என்பது இத்திட்டத்தின் கூடுதல் சிறப்பாகும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரி இந்திய முதுநிலை மாணவர்களுக்கான புதிய உதவித்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. எதிர்கால தலைவர்கள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி 30 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 30 பேரில் 15 பெண்களுக்கு வழங்கப்படும்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங், இம்பீரியல் கல்லூரியில் படிக்கும் ஆராய்ச்சியாளர்களை சந்திக்கச்சென்றபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சந்திப்பு இந்தியாவுடனான அவர்களின் உறவை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.

இந்த உதவித்தொகை, இம்பீரியலின் இன்ஜினியரிங், இயற்கை அறிவியல், மருத்துவம் மற்றும் வணிகம் படிக்கு அனைத்து துறைகளிலும், எம்எஸ்சி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த உதவித்தொகை திட்டம் குறித்து பேசுகையில், கல்வி மற்றும் மாணவர்கள் பிரிவு துணைத்தலைவர் பேராசிரியர் பீட்டர் ஹெய்ன்ஸ், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான உறவை வலுப்படுத்தும் இதுபோன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் கல்லூரி பெருமை கொள்கிறது.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து எதிர்காலத்தில நிறைய மாணவர்களை நாங்கள் வரவேற்க முடியும். இம்பீரியல், இந்தியாவின் எதிர்கால தலைவர்களுக்காக 400,000 பவுண்ட் தொகை மட்டுமே செலவிடுகிறது. தகுதிவாய்ந்த 30 மாணவர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த எதிர்கால தலைவர்கள் திட்டத்தின் உதவித்தொகையில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றார்.

இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இந்தியா - இங்கிலாந்து கூட்டறவை ஆதரிக்க முடியும் என்பதில் நம்பிக்கை உள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து ஆராய்ச்சியாளர்களுடன் புதிய உறவையும் இம்பீரியல் கல்லூரி அறிவித்துள்ளது. யாருக்கு எதிர்காலத்தில் நல்ல தலைவராகவும், முடிவுகளை எடுப்பதிலும், கொள்களைகளை வகுப்பதிலும் திறமை இருக்கிறதோ, அவற்றை நிரூபித்துக்காட்டுபவர்களுக்கு அந்த புதிய கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இது கல்வி செலவுடன் மாதாந்திர ஊக்கத்தொகையையும் வழங்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்