X COMPLAINTS: புதிய போஸ்ட் போட முடியவில்லை.. எக்ஸ் சமூக ஊடகதள செயலிழப்பால் வேதனையில் சமூக வலைதளப் பயனர்கள்-social media users in various countries suffering from x outage - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  X Complaints: புதிய போஸ்ட் போட முடியவில்லை.. எக்ஸ் சமூக ஊடகதள செயலிழப்பால் வேதனையில் சமூக வலைதளப் பயனர்கள்

X COMPLAINTS: புதிய போஸ்ட் போட முடியவில்லை.. எக்ஸ் சமூக ஊடகதள செயலிழப்பால் வேதனையில் சமூக வலைதளப் பயனர்கள்

Marimuthu M HT Tamil
Aug 28, 2024 02:49 PM IST

X COMPLAINTS: புதிய போஸ்ட் போட முடியவில்லை என எக்ஸ் சமூக ஊடகதள செயலிழப்பால் சமூக வலைதளப் பயனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

X COMPLAINTS: புதிய போஸ்ட் போட முடியவில்லை.. எக்ஸ் சமூக ஊடகதள செயலிழப்பால் வேதனையில் சமூக வலைதளப் பயனர்கள்
X COMPLAINTS: புதிய போஸ்ட் போட முடியவில்லை.. எக்ஸ் சமூக ஊடகதள செயலிழப்பால் வேதனையில் சமூக வலைதளப் பயனர்கள் (AFP)

பயனர்கள் உட்பட பல டேட்டாக்களில் இருந்து, செயலிழப்பு புகார்களை ஒன்றிணைக்கும், அதாவது ஒன்றிணைக்கும் நிறுவனமான டவுன்டிடெக்டர், அமெரிக்காவில் மட்டும் எக்ஸ் சமூக ஊடகதளம் இதுவரை 36,500 க்கும் மேற்பட்ட புகார் அறிக்கைகளைப் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

பிறநாடுகளிலும் தொடர்ந்த எக்ஸ் செயல் இழப்பு:

அதுமட்டுமின்றி, டவுன்டிடெக்டர் இணையதளத்தின் அறிக்கையின்படி, கனடா நாட்டில் எக்ஸ் சமூக ஊடகதளம் 3,300-க்கும் மேற்பட்ட செயலிழப்பு புகார்களையும், இங்கிலாந்தில் எக்ஸ் சமூக ஊடகதளம் 1,600 செயலிழப்பு புகார்களை எட்டியுள்ளது. எக்ஸ் சமூக ஊடகதளத்துக்குண்டான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இந்தியாவை தளமாகக் கொண்ட பல எக்ஸ் சமூக வலைதளப்பயனர்கள் புதிய இடுகைகளை ஏற்றவோ அல்லது அவர்களின் பின்னூட்டங்களைப் புதுப்பிக்கவோ முடியவில்லை எனப்புகார்கள் எழுந்தன. பெரும்பாலான சிக்கல்கள் எக்ஸ் சமூக ஊடகத்தின் ஆப்பில் இருந்து தோன்றியதாகத் தெரிகிறது.

முன்னதாக எக்ஸ் சமூக ஊடக உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான ஸ்பேஸ் உரையாடல் நடந்து கொண்டு இருந்தபோது, இப்படி ஒரு செயலிழப்பு இடையில் குறுக்கிடப்பட்டது. அதேபோல், இந்தப் பிரச்னை இரண்டாவதாக வந்துள்ளது. இதனை ஒரு "பெரிய" சைபர் தாக்குதல் என்று முன்னாள் எக்ஸ் சமூக ஊடகப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் பொறுப்பினை ஏற்றதில் இருந்து வலுக்கும் சிக்கல்:

எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தம்போட்டு, ட்விட்டரை வாங்கி எக்ஸ் என்னும் சமூக ஊடகதளமாகப் பெயர் மாற்றினார். எலான் மஸ்க் எக்ஸ் சமூக ஊடகத்தின் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, எக்ஸ் சமூக ஊடகத்தின் தொழில்நுட்ப செயலிழப்புகள் மற்றும் குறைபாடு தொடர்பான புகார்கள் அதன் பயனர்களிடம் இருந்து அதிகம் வரத்தொடங்கின. தொழில்நுட்ப முதலாளிகள் பலர் கடந்த காலங்களில் எக்ஸ் தளத்தை நன்கு விமர்சித்துள்ளனர் மற்றும் அதனை நீடிக்காது என்று சொல்லியுள்ளனர்.

இந்த எக்ஸ் சமூக ஊடகத்தள செயலிழப்பு என்பது ஒரு சுருக்கமான ஒன்றாகும். மொத்தம் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே நீடித்தது என எக்ஸ் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

முன்னதாக, 'எக்ஸ்'சமூக ஊடகதளம் உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு ஏப்ரல் மாதமும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது.

டவுன்டிடெக்டரின் கூற்றுப்படி, இந்திய பயனர்கள் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக ஊடக தளமான எக்ஸை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகப் புகார் அளித்துள்ளனர். டவுன்டிடெக்டர் உலகளாவிய எக்ஸ் பயனர்களிடம், முக்கியமாக பயன்பாட்டில் உள்ளவர்களுடன் சிக்கல்போக்கு இருப்பதைக்காட்டியது

டவுன்டிடெக்டரின் கூற்றுப்படி, ஏப்ரல் மாதம் சுமார் 41 சதவீத எக்ஸ் பயனர்கள் இந்த சமூக ஊடக தளத்தை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மொபைல் பயன்பாட்டு பயனர்களில் 57 சதவீதம் பேர் எக்ஸ் இடுகைகளைப் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்தியாவிலும் இப்பிரச்னை எக்ஸ் பயனர்களிடையே அதிகம் இருந்தது.

சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் என்னும் டிவிட்டர் சமூக வலைதளம் என்பது உலகம் முழுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கும் சமூக ஊடகதளமாகும்.

 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.