ED director: ’ED இயக்குநரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்’ மத்திய அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ed Director: ’Ed இயக்குநரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்’ மத்திய அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்

ED director: ’ED இயக்குநரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்’ மத்திய அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்

Kathiravan V HT Tamil
Jul 11, 2023 03:09 PM IST

”62 வயதான எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம்தேதி முதன் முதலில் அமலாக்கத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்”

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா
அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ரா

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஏற்கெனவே இருக்கும் அதிகாரியை மத்திய அரசு நியமித்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜெயா தாக்கூர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா மற்றும் சாகேத் கோகலே உள்ளிட்டோர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

அரசியல் எதிரிகளுக்கு எதிராக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பை அழித்துவிட்டதாக ஜெயாதாக்கூர் தனது மனுவில் குற்றம்சாட்டி இருந்தார்.

62 வயதான எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம்தேதி முதன் முதலில் அமலாக்கத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி அவரது பதவிக்காலம் இரண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக மாற்றப்பட்டது.

அதுமட்டுமின்றி அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் தலைவர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய அவசர சட்டத்தையும் கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது.

தற்போதைய பதவி நீட்டிப்பு வரும் ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடையும் நிலையில் அதற்கு மேல் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு செய்யக்கூடாது. இதுவரை அவருக்கு பதவி நீட்டிப்பு செய்தது சட்டவிரோதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாவது முறையாக எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கிய மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், இந்த பதவி நீட்டிப்பு சட்டவிரோதம் என்றும் தெரிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.