Owaisi: 'சாவர்க்கர் வகை கோழைத்தன நடத்தை’: டெல்லி வீட்டில் கருப்பு மை வீசப்பட்டது குறித்து அசாதுதீன் ஒவைசி கருத்து
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Owaisi: 'சாவர்க்கர் வகை கோழைத்தன நடத்தை’: டெல்லி வீட்டில் கருப்பு மை வீசப்பட்டது குறித்து அசாதுதீன் ஒவைசி கருத்து

Owaisi: 'சாவர்க்கர் வகை கோழைத்தன நடத்தை’: டெல்லி வீட்டில் கருப்பு மை வீசப்பட்டது குறித்து அசாதுதீன் ஒவைசி கருத்து

Marimuthu M HT Tamil
Jun 28, 2024 11:09 AM IST

Owaisi: சாவர்க்கர் வகை கோழைத்தன நடத்தை என டெல்லி வீட்டில் கருப்பு மை வீசப்பட்டது குறித்து அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

Owaisi: 'சாவர்க்கர் வகை கோழைத்தன நடத்தை’: டெல்லி வீட்டில் கருப்பு மை வீசப்பட்டது குறித்து அசாதுதீன் ஒவைசி கருத்து
Owaisi: 'சாவர்க்கர் வகை கோழைத்தன நடத்தை’: டெல்லி வீட்டில் கருப்பு மை வீசப்பட்டது குறித்து அசாதுதீன் ஒவைசி கருத்து (ANI)

உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரையும் தாக்கிய ஒவைசி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அவர்கள் உத்தரவாதம் அளிப்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.

அசாதுதீன் ஒவைசியின் வீட்டில் வீசப்பட்ட கருப்பு மை:

இதுதொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "சில ’அடையாளம் தெரியாத குற்றவாளிகள்' இன்று கருப்பு மையால் என் வீட்டை சேதப்படுத்தியுள்ளனர். எனது டெல்லி இல்லம் எத்தனை முறை குறிவைக்கப்பட்டது என்ற எண்ணிக்கையை நான் இப்போது இழந்துவிட்டேன். இது எப்படி நடக்கிறது என்று நான் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் உதவியற்ற தன்மையை வெளிப்படுத்தினர்," என்று அசாதுதீன் ஒவைசி எழுதியுள்ளார்.

மேலும் அவர், "அமித் ஷா, இது உங்கள் மேற்பார்வையில் நடக்கிறது. ஓம் பிர்லா, எம்.பி.க்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுமா இல்லையா என்பதை எங்களிடம் சொல்லுங்கள்" என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

இந்த தாக்குதல் தன்னை பயமுறுத்தவில்லை என்று ஒவைசி கூறினார்.

மேலும் அசாதுதீன் ஒவைசி,"என் வீட்டை தொடர்ந்து குறிவைக்கும் இரண்டு பிட் குண்டர்களுக்கு: இது என்னை பயமுறுத்தவில்லை. இந்த சாவர்க்கர் மாதிரியான கோழைத்தனமான நடத்தையை நிறுத்திவிட்டு, என்னை எதிர்கொள்ளும் அளவுக்கு மனிதர்களாக இருங்கள். சில மையை வீசிய பின்னரோ அல்லது சில கற்களை வீசிய பின்னரோ ஓட வேண்டாம்" என்று அவர் கூறியுள்ளார்.

ஜெய் சியா ராம் என்று முழக்கமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள்:

இதற்கிடையில், தெலங்கானா மாநிலம், பகதூர்புரா சட்டப்பேரவையின் ஏஐஎம்ஐஎம் எம்.எல்.ஏ முகமது முபீன், குற்றவாளிகள், அசாதுதீன் ஒவைசியின் வீட்டை சேதப்படுத்தும்போது ’’ஜெய் சியா ராம்’’ என்று கோஷமிட்டதாகக் கூறினார்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது,"சில குற்றவாளிகள் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவாசிஸின் டெல்லி இல்லத்தை கருப்பு மையால் சூறையாடி 'ஜெய் சியா ராம்' கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தை விசாரித்து, இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம், "என்று அவர் கூறினார்.

மக்களவையில் இருந்து அவரை இடைநீக்கம் செய்யக் கோரி வியாழக்கிழமை(ஜூன் 28) மாலை ஐந்து பேர் கொண்ட குழு ஒவைசியின் இல்லத்திற்கு வெளியே சுவரொட்டிகளை ஒட்டியது.

அந்த சுவரொட்டியில் 'பாரத் மாதா கி ஜெய்', 'நான் இஸ்ரேலுடன் நிற்கிறேன்', 'ஒவைசியை இடைநீக்கம் செய்ய வேண்டும்' என்று சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தது.

அந்த நபர்களை அடையாளம் காண முயற்சிப்பதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் பி.டி.ஐ.யிடம் தெரிவித்தார்.

ஹைதராபாத் எம்.பி., மக்களவையில் பதவியேற்றபோது, 'ஜெய் பாலஸ்தீன்' கோஷத்தை எழுப்பியதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

விநாயக் தாமோதர் சாவர்க்கர் சுதந்திரத்திற்கு முந்தைய பாஜகவின் ஐகான் மற்றும் மிகப்பெரிய ஆர்.எஸ்.எஸ். சிந்தனைவாதி, வலதுசாரி ஆர்வலர்.

யார் இந்த அசாதுதீன் ஒவைசி?:

அசாதுதீன் ஒவைசி, ஏஐஎம்ஐஎம் எனப்படும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் என்னும் கட்சியின் தலைவராக இருந்தார்.

அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஹைதராபாத்தின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.