First Parliament session: புதிய மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 15ஆம் தேதி தொடங்க வாய்ப்பு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  First Parliament Session: புதிய மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 15ஆம் தேதி தொடங்க வாய்ப்பு!

First Parliament session: புதிய மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 15ஆம் தேதி தொடங்க வாய்ப்பு!

Kathiravan V HT Tamil
Jun 08, 2024 12:58 PM IST

நாடாளுமன்றம் தொடங்கும் முதல் இரண்டு நாட்களுக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார் என்றும் நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

First Parliament session: புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 15ஆம் தேதி தொடங்க வாய்ப்பு!
First Parliament session: புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 15ஆம் தேதி தொடங்க வாய்ப்பு!

எம்.பிக்களுக்கு பதவி பிரமாணம் 

நாடாளுமன்றம் தொடங்கும் முதல் இரண்டு நாட்களுக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார் என்றும் நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. 

முதல் கூட்டத்தை தொடங்கி வைக்கும் குடியரசுத் தலைவர் 

அடுத்த நாள், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி கூட்டத்தொடரை முறையாக துவக்கி வைக்க உள்ளார்.

அமர்வின் தேதிகள் குறித்த இறுதி அழைப்பு புதிய மத்திய அமைச்சரவையால் எடுக்கப்படும். இந்த அமர்வின் போது, பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் குழு உறுப்பினர்களை இரு அவைகளுக்கும் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த கூட்டத்தொடர் ஜூன் 22ஆம் தேதி நிறைவடையும் என்று தெரிகிறது.

பிரதமர் மோடியின் அமைச்சரவை நாளை பதவி  ஏற்பு

நாளை (ஜூன் 9) மாலை ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு அமைச்சரவை விரைவில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் 17வது மக்களவை ஜூன் 5ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்முவால் கலைக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த கடிதத்தை பாஜக தலைவர் ஜேபி நட்டா தன்னிடம் அளித்ததை அடுத்து, வெள்ளிக்கிழமையன்று மோடியை பிரதமராக நியமித்த முர்மு, தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சித் தலைவர்கள் அளித்த ஆதரவு கடிதங்களை பெற்றுக் கொண்டார். 

543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பாஜக 240 இடங்களை வென்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பாஜக பெறாத காரணத்தால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் 293 பேரின் ஆதரவு உடன் ஆட்சி அமைக்க உள்ளது. 

’அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’

பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அண்டை நாடுகளின் தலைவர்களை அழைத்து உள்ளோம். இது "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை (Neighbourhood First)" கொள்கை மற்றும் ”சாகர் (SAGAR)” எனப்படும் பிராந்தியத்தில் அனைவருக்குமான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பார்வைக்கு இந்தியா அளித்த மிக உயர்ந்த முன்னுரிமையாக இது ஏற்பாடு செய்து உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் தலைவர்கள்!

இந்த விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, செஷல்ஸ் துணை அதிபர் அகமது அபிப், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதைத் தவிர, அண்டை நாட்டு தலைவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அளிக்கும் விருந்திலும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய பெருங்கடல் நாடுகள் உடனான ஒத்துழைப்பு

வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலத்தீவு, மொரிஷியஸ், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தலைவர்களை அழைக்கும் முடிவின் பின்னணியில் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கையும், இந்தியப் பெருங்கடல் நாடுகளுடனான ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவது ஆகிய முக்கிய காரணிகள் உள்ளதாக ஏற்கெனவே கடந்த செவ்வாய் என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெள்யிட்டு இருந்தது.

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.