Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!

Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Jul 29, 2024 10:04 PM IST

நடுத்தர வர்க்கம் எப்போதும் பிரதமர் சொல்வது கேட்டு வருகின்றது, கோவிட் காலத்தில் பிரதமர் கோரிக்கைக்கு இணங்க, கைதட்டி விளக்குகளை ஏற்றினர். ஆனால் அந்த வர்க்கம் இந்த அரசால் ஏமாற்றமடைந்து உள்ளது என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்!
Rahul Gandhi: மகாபாரதத்தை சுட்டிக்காட்டி மோடி, அமித்ஷாவை வெளுத்த ராகுல் காந்தி! நடுத்தர மக்களை ஏமாற்றிவிட்டதாக ஆவேசம்! (PTI)

பட்ஜெட்டில் ஏகபோக மூலதனம் 

ஏகபோக மூலதனம், அரசியல் ஏகபோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

மகாபாரதத்தில் சக்ர வியூகத்தில் அபிமன்யூ கொலை செய்யப்பட்டார். அதே போல் "21 ஆம் நூற்றாண்டில், மற்றொரு 'சக்ரவியூகம்' தயாரிக்கப்பட்டுள்ளது, அது தாமரை வடிவத்தில் உள்ளது. அப்போது அபிமன்யூக்கு என்ன நடந்ததோ அது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நடைபெற்று உள்ளது. 

ஏகபோக மூலதனம், நிதி அதிகாரத்தின் குவிப்பு, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை இந்த சக்ர வியூகத்தை கைக்கோர்த்து உள்ளன. இந்த அமைப்புகள் நாட்டை சீரழித்து வருகின்றது.  

மத்திய அரசு தாக்கல் செய்து உள்ள பட்ஜெட், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு உதவும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அரசியல் மற்றும் வணிக ஏகபோகத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது. 

ஒரு வார்த்தை கூட பேசவில்லை 

மக்கள் மீது செலுத்தப்படும் வரி தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. இந்த வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர பட்ஜெட் எதுவும் செய்யவில்லை. வினாத்தாள் கசிந்தது குறித்து நிதியமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என ராகுல் காந்தி கூறினார். 

நடுத்தர வர்கத்தை ஏமாற்றிவிட்டனர்

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கிடைப்பதை இந்தியா கூட்டணி உறுதி செய்யும் என்று கூறிய ராகுல் காந்தி, நடுத்தர வர்க்கம் எப்போதும் பிரதமர் சொல்வது கேட்டு வருகின்றது, கோவிட் காலத்தில் பிரதமர் கோரிக்கைக்கு இணங்க, கைதட்டி விளக்குகளை ஏற்றினர். ஆனால் அந்த வர்க்கம் இந்த அரசால் ஏமாற்றமடைந்து உள்ளது என ராகுல் காந்தி கூறி உள்ளார். 

உயர் பதவிகளில் பிரதிநிதித்துவம் குறைந்து உள்ளது 

மத்திய அரசில் உயர் அதிகார பதவிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, 

நிதி அமைச்சகம் சார்பில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நடத்தப்படும் அல்வா கிண்டும் நிகழ்வின் புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் காட்டினார். 

அப்போது, “நாட்டில் 73% பேர் தலித், ஆதிவாசி மற்றும் ஓபிசி சமூகத்தை சேர்ந்த மக்களாக உள்ளனர். அவர்கள் இந்தியாவின் முக்கிய பலம். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்களுக்கு வணிகத்திலும் அரசாங்கத்திலும் போதுமான இடம் கிடைக்கவில்லை. 

பட்ஜெட்டிற்கு முந்தைய அல்வா நிகழ்ச்சியில், ஒரு எஸ்.சி, எஸ்.டி அல்லது ஓபிசி சமூகத்தை சேர்ந்த அதிகாரியையும் என்னால் பார்க்க முடியவில்லை. சிறுபான்மை மற்றும் ஓபிசி சமூகத்தை சேர்ந்த தலா ஒருவர் உட்பட 20 அதிகாரிகள் பட்ஜெட் தயாரிப்பின் பின்னணியில் இருந்தனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவர் இல்லை என ராகுல் காந்தி கூறினார். 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.