Priyanka Gandhi: அமேதியா? சுல்தான்பூரா? தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா! வதேரா சொன்ன புதுத்தகவல்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Priyanka Gandhi: அமேதியா? சுல்தான்பூரா? தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா! வதேரா சொன்ன புதுத்தகவல்!

Priyanka Gandhi: அமேதியா? சுல்தான்பூரா? தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா! வதேரா சொன்ன புதுத்தகவல்!

Kathiravan V HT Tamil
Aug 14, 2023 05:20 PM IST

“பிரியங்கா காந்தி மக்களவைக்கு வந்தால் மக்கள் நன்றாக இருப்பார்கள்” - ராபர்ட் வதேரா

பிரியங்கா காந்தி - ராபர்ட் வதேரா
பிரியங்கா காந்தி - ராபர்ட் வதேரா

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் வியூகங்களை வகுக்கும் வேலைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட மாட்டார் என கூறப்படும் நிலையில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என அவரது கணவரும் தொழிலபதிபருமான ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி மக்களவைக்கு வந்தால் மக்கள் நன்றாக இருப்பார்கள் என்றும், அமேதி அல்லது சுல்தான்பூர் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவரை களமிறக்கமால் என்றும் வதேரா கருத்து தெரிவித்துள்ளார். பாஜக சிக்கலில் இருக்கும் போது, மக்களின் கவனத்தை திசை திருப்ப, நில பேர விசாரணையில் தனது பெயரை பயன்படுத்த முயற்சிக்கிறது என குற்றம்சாட்டி உள்ள ராபர்ட் வதேரா, பிரியங்கா காந்தி சிறப்பாக பிரச்சாரம் செய்கிறார், காங்கிரஸின் தூணாக இருக்கிறார், அவரது கடின உழைப்பை கட்சி கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கும் பிரியங்கா காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக அரசியலில் நுழைந்தார். அமேதியில் ராகுல் காந்திக்காகவும், ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் தனது தாய் சோனியா காந்திக்காகவும் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்துள்ளார். தற்போது அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியும் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தியும் எம்.பியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.