FACT-CHECK : உணவு பரிமாறும் போது பிரதமர் மோடி வைத்திருந்த வாளி காலியாக இருந்ததா? வைரலாகும் புகைப்படம்.. உண்மை என்ன?
உணவு பரிமாறும் போது பிரதமர் மோடி வைத்திருந்த வாளி காலியாக இருப்பதாக எக்ஸ் தளத்தில் புகைப்படம் வைரலானது. உண்மையில் பிரதமர் மோடி வைத்திருந்த வாளியில் உணவு இருந்ததா? இல்லையா என்பதை இதில் பார்க்கலாம்.

தகாத் ஸ்ரீ பாட்னா சாஹிப் குருத்வாராவிற்கு மே 13, 2024 அன்று பிரதமர் மோடி சென்றார். மோடி தலைப்பாகை அணிந்து, பக்தர்களுக்கு உணவு பரிமாறினார். உணவு பரிமாறும் போது பிரதமர் மோடி வைத்திருந்த வாளி காலியாக இருப்பதாக எக்ஸ் தளத்தில் புகைப்படம் வைரலானது. உண்மையில் பிரதமர் மோடி வைத்திருந்த வாளியில் உணவு இருந்ததா? இல்லையா என்பதை இதில் பார்க்கலாம்.
நடந்தது என்ன?
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தகாத் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப் குருத்வாராவில் உள்ள லங்கரில் (சமூக சமையலறை) பக்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உணவு பரிமாறும் புகைப்படம் வெளியானது. இதில் பிரதமர் மோடி வைத்திருந்த வாளி காலியாக இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுடன் பகிரப்பட்டு வருகிறது.
லாங்கரில் மோடி உணவு பரிமாறும் காட்சிகளை BOOM தளம் உண்மை தன்மையை ஆராய்ந்ததில், அவர் வைத்திருந்த வாளியில் கீர் இருந்ததைக் கண்டறிந்தனர். பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் பிறப்பிடமாக முக்கியத்துவம் வாய்ந்த தகாத் ஸ்ரீ பாட்னா சாஹிப் குருத்வாராவிற்கு மே 13, 2024 அன்று பிரதமர் மோடி சென்றார். மோடி தலைப்பாகை அணிந்து, பக்தர்களுக்கு உணவு பரிமாறும் போது கீர் வாளியை கையில் வைத்திருந்தார்.