’விளக்கு பிடித்து தேடினாலும் இது போல் தலைவர் கிடைக்க மாட்டார்!’ அமித் ஷா பாராட்டிய இளம் தலைவர் யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ’விளக்கு பிடித்து தேடினாலும் இது போல் தலைவர் கிடைக்க மாட்டார்!’ அமித் ஷா பாராட்டிய இளம் தலைவர் யார் தெரியுமா?

’விளக்கு பிடித்து தேடினாலும் இது போல் தலைவர் கிடைக்க மாட்டார்!’ அமித் ஷா பாராட்டிய இளம் தலைவர் யார் தெரியுமா?

Kathiravan V HT Tamil
May 25, 2024 09:18 PM IST

Amit Shah: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எங்களுடையது, அதை மீட்டெடுப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

’விளக்கு பிடித்து தேடினாலும் இது போல் தலைவர் கிடைக்க மாட்டார்!’ அமித் ஷா பாராட்டிய இளம் தலைவர் யார் தெரியுமா?
’விளக்கு பிடித்து தேடினாலும் இது போல் தலைவர் கிடைக்க மாட்டார்!’ அமித் ஷா பாராட்டிய இளம் தலைவர் யார் தெரியுமா? (ANI Pic Service)

இலாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி

இமாச்சல பிரதேச மாநிலம், ஹமிர்பூர் மற்றும் காங்ரா நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனுராக் தாக்கூர் மற்றும் ராஜீவ் பரத்வாஜ் ஆகியோரை ஆதரித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 

ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மத்தியிலும், இமாச்சல பிரதேச மாநிலத்திலும் என இரண்டு புதிய அரசுகள் அமைய உள்ளன என கூறிய அவர் ராகுல் பாபா ஓய்வெடுக்க ஜூன் 6 ஆம் தேதி பாங்காக் செல்வார் என அமித் ஷா கூறினார். 

மோடியால் மட்டுமே பயங்கரவாததை எதிர்க்க முடியும் 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான வலுவான அரசால் மட்டுமே பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவும், பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், ஏழைகளைக் கவனித்துக்கொள்ளவும் முடியும் என்று அமித் ஷா கூறினார். 

“பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது என்று சொல்லி நம்மைப் பயமுறுத்தப் பார்க்கிறது காங்கிரஸ். மேலும், இன்று நான் இந்த மண்ணில் இருந்து பேசுகிறேன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) எங்களுடையது, அது நம்முடையதாகவே இருக்கும். நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம் என அமித் ஷா கூறினார். 

காஷ்மீர் 370 ரத்து 

2019 ஆம் ஆண்டு 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டபோதும், காங்கிரஸ் தலைவர்கள் இது இரத்தக்களரிக்கு வழிவகுக்கும் என்று கூறினார், ஆனால் ஜம்மு காஷ்மீரில் ஒரு கல் கூட வீசப்படவில்லை என்று கூறிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி, குண்டுவெடிப்புகளைத் தூண்டிவிட்டுத் திரும்பி வந்தனர், மோடி அரசாங்கத்தில் இது முற்றிலும் மாறிவிட்டது என தெரிவித்தார். 

உரி மற்றும் புல்வாமா சம்பவங்களுக்குப் பிறகு பயங்கரவாதிகளின் ஏவுதளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதைக் குறிப்பிட்டு, "நாங்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி, பயங்கரவாதிகளை அவர்களது வீடுகளுக்கு சென்று அழித்தோம் என்று அமித் ஷா பேசினார். 

பாஜக 400 இடங்களில் வெல்லும்! காங்கிரஸ் 40 இடங்களில் வெல்லும்!

பிரதமர் மோடி போன்ற ஒரு தலைவரால் மட்டுமே பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்தை ஒழிக்க முடியும் என அமித் ஷா கூறினார். லோக்சபா தேர்தலின் முதல் ஐந்து கட்டங்களில் பிரதமர் மோடி ஏற்கனவே 310 இடங்களை வென்றுள்ளதாகவும், ஆறாவது மற்றும் ஏழாவது கட்டங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்றும் ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 40 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் அமித் ஷா கூறினார்.

விளக்கு ஏற்றி தேடினாலும் இதுபோல் தலைவர் கிடைக்கமாட்டார்!

ஹமிர்பூர் மக்களவைத் தொகுதியில் ஐந்தாவது முறையாக போட்டியிடும் அனுராக் தாக்கூரின் சாதனைகளைப் பாராட்டிய அமித் ஷா, "நீங்கள் விளக்கை ஏற்றித் தேடினாலும், இவரைப் போன்ற உயர்ந்த தலைவரை காண முடியாது" என பாராட்டினார். 

"பாஜக ஆட்சி அமைப்பதற்கான ஆறு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்து, இமாச்சலில் தாமரை மலர வேண்டும் என்று அமித் ஷா கூறினார். 

கடந்த பிப்ரவரி மாதம் இலச்சல பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு எதிராக கலகம் செய்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்களை இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக பாஜக நிறுத்தி உள்ளது. 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.