ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு: ஆளுநர் பதவிப் பிரமாணம்
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார். அமைச்சர்களாக சகினா இட்டூ, ஜாவீத் ராணா, சுரிந்தர் சவுத்ரி, ஜாவீத் தார், சதீஷ் சர்மா ஆகியோர் பதவியேற்றனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பிறகு தேர்வு செய்யப்பட்ட முதல் முதல்வர் இவர்தான்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு: ஆளுநர் பதவிப் பிரமாணம் (PTI)
370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் சட்டமன்றத் தேர்தலில் தனது தேசிய மாநாட்டுக் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதல்வராக உமர் அப்துல்லா புதன்கிழமை பதவியேற்றார். முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களின் பதவியேற்பு விழா ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (எஸ்.கே.ஐ.சி.சி) நடைபெற்றது.
முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அமைச்சர்களாக சகினா இட்டூ, ஜாவீத் ராணா, சுரிந்தர் சவுத்ரி, ஜாவீத் தார், சதீஷ் சர்மா ஆகியோர் பதவியேற்றனர். பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
