Vettaiyan Update: ஃபகத் பாசில், ராணா, ரஜினிகாந்த் மோதும் காட்சி..! இறுதிகட்ட படப்பிடிப்பில் வேட்டையன்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் நடைபெற்ற வேட்டையன் படப்பிடிப்பை முடித்து, குட்டி பிரேக்குக்கு பின் தற்போது கடப்பா சென்றுள்ளார் சூப்பர் ரஜினிகாந்த்.
ஜெய் பீம் பட இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து வேட்டையன் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ஆந்திரா மாநிலம் கடப்பாவுக்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த். இங்குதான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. கடப்பாவில் ஷுட்டிங் முடிவடைந்து விட்டால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இறுதிகட்ட படப்பிடிப்பில் மலையாள நடிகர் ஃபகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோரும் பங்கேற்க உள்ளார்களாம். ரஜினிகாந்த், ஃபகத் பாசில், ராணா ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
இந்த படப்பிடிப்பு கடப்பா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சில வாரங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறையில் படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட உள்ளனராம்.
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கிறார்கள்.
மஞ்சு வாரியர் கதையின் நாயகி கதாதபாத்திரத்தில் நடிக்கிறார். ரித்திகா சிங், துஷார விஜயன், ரக்ஷன் உள்பட பலரும் படத்தில் நடிக்கிறார்கள். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதற்கிடையே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால் சலாம் பிப்ரவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
கடந்த இரு நாள்களுக்கு முன்னர் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்