தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Nuh Violence: ஹரியானா வன்முறையில் 5 பேர் பலி - இணையசேவை துண்டிப்பு! ஊரடங்கு அமல்

Nuh violence: ஹரியானா வன்முறையில் 5 பேர் பலி - இணையசேவை துண்டிப்பு! ஊரடங்கு அமல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 02, 2023 11:00 AM IST

ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5 என உயர்ந்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், நூ மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ஹரியானாவின் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் பலி
ஹரியானாவின் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் பலி

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் ஏற்பட்ட துப்பாக்கியால் சூட்டில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உயிரிழந்தனர். ஏராளமான போலீசார் காயமடைந்தனர். வன்முறை காரணமாக நூ மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை முடக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வன்முறை அருகில் இருந்த குருகிராமுக்கும் பரவியது. அங்கு செக்டார் 57 பகுதியில் உள்ள மசூதியில் கும்பல் ஒன்று நள்ளிரவில் தீ வைத்தது. இந்த கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுவரை நூ மாவட்டத்தில் நிகழந்த வன்முறையால் பலியானோர் எண்ணிக்கை 5 என உயர்ந்துள்ளது. வன்முறை தொடர்பாக 116 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வன்முறையில் 50 போலீஸ் வாகனங்கள் உள்பட 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீவைக்கப்பட்டன. 10 போலீசார் உள்பட 23 பேர் காயமடைந்துள்ளனர். வன்முறை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ஹரியானா வன்முறை குறித்து அம்மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது: " இந்த வன்முறையானது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவற்கான நடவடிக்கை எடுக்கப்படும்."

தற்போது அங்கு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏராளமான போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இணைய சேவையானது இன்று வரை துண்டிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்