Wayanad landslide: உருக்குலைந்த வயநாடு..களத்தில் மீட்புக்குழுவினர் - கழுகு பார்வை காட்சிகள்!
- கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து இன்று 6-வது நாளாக ஈடுபட்டு வருகின்றன. 6-வது நாளாக மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 206 ஆக இருக்கிறது. உயிரிழப்பு 320-ஐ கடந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. ராணுவ வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.