தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Corona Virus : மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அபுதாபியில் மெர்ஸ் கொரோனா வைரஸ் – Who எச்சரிக்கை

Corona Virus : மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அபுதாபியில் மெர்ஸ் கொரோனா வைரஸ் – WHO எச்சரிக்கை

Priyadarshini R HT Tamil
Jul 25, 2023 10:54 AM IST

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி இதுவரை 2,605 மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்புகளும், அது தொடர்பாக 936 இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அபுதாபியில் மெர்ஸ் கொரோனா வைரஸ் – WHO எச்சரிக்கை
மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! அபுதாபியில் மெர்ஸ் கொரோனா வைரஸ் – WHO எச்சரிக்கை

ட்ரெண்டிங் செய்திகள்

அபுதாபியில் மெர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நபர் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐ.நாவின் அறிக்கைப்படி, 28 வயது ஆண் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி கடந்த மாதம் ஏன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து சுகாதார ஊழியர்கள் அவருடன் தொடர்பில் இருந்த 108 பேரை பரிசோதித்தனர். ஆனால் அதில் யாருக்கும் இதுவரை தொற்று ஏற்படவில்லை என ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியை உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய உடல்நிலை சீராக உள்ளது. இதற்கிடையில் இந்த நோயை பரப்பும் ஒட்டகங்களுடன் அவர் தொடர்பில் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெர்ஸ் கொரோனா வைரஸ் என்றால் என்ன?

தி மிடில் ஈஸ்ட் ரெஸ்பரேட்டரி சிண்ரோம் (மெர்ஸ்-கோவி) முதலில் சவுதி அரேபியாவில் 2012ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அது கண்டுபிடிக்கப்பட்டது முதல் 27 நாடுகள் மெர்ஸ் கொரானா பாதிப்புகள் குறித்து அறிவித்தது. அதில் அல்ஜீரியா, ஆஸ்திரியா, பெக்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், கிரீஸ், ஜெர்மனி, ஈரான், இத்தாலி, ஜோர்டன், குவைத், லெபனான், மலோசியா, நெதர்லாந்து, ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், கொரியா, கவுதி அரேபியா, தாய்லாந்து, டூனிசியா, துருக்கி, யுனைடட் அரார் எமிரேட்ஸ், யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் ஆகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, 2,605 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 936 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெர்ஸ் ஒரு விலங்கியல் நோய், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. சவுதி அரேபியாவில் இந்த நோய் நிறைய பேருக்கு பாதிக்கப்பட்ட ஒட்டகங்களிடம் பாதுகாப்பின்றி தொடர்பு வைத்துக்கொள்ளும் நபர்களுக்கு ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தொற்று ஏற்பட்டால் ஒருவருக்கு தோன்றும் அறிகுறிகள், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், சிலருக்கு நிமோனியா ஆகியவை ஏற்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்