தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi:'தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள், அழிவுகரமானதாக அல்ல’: ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

PM Modi:'தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள், அழிவுகரமானதாக அல்ல’: ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Marimuthu M HT Tamil
Jun 15, 2024 11:46 AM IST

PM Modi: தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

PM Modi:'தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள், அழிவுகரமானதாக அல்ல’: ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
PM Modi:'தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள், அழிவுகரமானதாக அல்ல’: ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

PM Modi: ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கும், தொழில்நுட்பத்தின் நன்மைகள் அனைத்து பிரிவினரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, நேற்று(ஜூன் 14), இத்தாலியில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உலகத் தலைவர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் எரிசக்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு அமர்வில் பங்கேற்ற மோடி, தொழில்நுட்பம் அழிவுகரமானதாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.