MK Stalin: ’ஜோ பைடனை மு.க.ஸ்டாலின் சந்தித்தது எப்படி?’ உண்மையை போட்டு உடைத்த துரைமுருகன்!
”53 ஆண்டுகள் கலைஞரின் இடுப்பிலே இருந்த எனக்கு அவரின் குணங்களையும் வியூகங்களையும் தெரியும். அதை தப்பால் தளபதி செய்து வருகிறார்”
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொங்கு மண்டல திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் படியூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசினார்.
அதில், இந்த நாட்டில் இருக்கிற குடிமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றும் ஒரே ஒரு முதலமைச்சர் நம்முடைய தலைவர் மட்டும்தான்.
ஆட்சி, கட்சியை நடத்துவதில் நிகரற்று உள்ள காரணத்தால்தான் இன்றைக்கு மத்தியில் மாற்று ஆட்சி அமைய முக்கியஸ்தராக முதலமைச்சர் உள்ளார். பிரதமரும் தளபதி அவர்களை விரும்புகிறார்.
இல்லாவிட்டால் ஜி20 மாநாட்டுக்கு எவ்வுளவோ முதலமைச்சர்களும் வந்தார்கள், ஆனால் எந்த முதலமைச்சரையும் அழைத்து அமெரிக்க நாட்டு ஜனாதிபதிக்கு, “இவர்தான் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று எவரையும் காட்டவில்லை. மோடியை எதிர்க்கின்ற அரசு என்றால் கூட வீரத்தோடு எதிர்க்கிறவர் ஸ்டாலின் என மோடி நினைத்து இருக்கிறார்.
53 ஆண்டுகள் கலைஞரின் இடுப்பிலே இருந்த எனக்கு அவரின் குணங்களையும் வியூகங்களையும் தெரியும். அதை தப்பால் தளபதி செய்து வருகிறார் என துரைமுருகன் பேசினார்.