தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Top 10 News: 'தமிழக கோயில்கள் ஆக்கிரமிப்பு' மோடி குற்றச்சாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Top 10 News: 'தமிழக கோயில்கள் ஆக்கிரமிப்பு' மோடி குற்றச்சாட்டு உள்ளிட்ட முக்கிய செய்திகள்

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 04, 2023 07:09 AM IST

•அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் பிரதமர் மோடி
தெலுங்கானாவில் பிரதமர் மோடி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

•அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

•ஆசிய விளையாட்டில் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற பாருல் சவுத்ரி மற்றும் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அன்னு ராணி ஆகியோருக்கும் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

•சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

•சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கலைந்து செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கங்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளன.

•இந்து கோயில்களை தமிழ்நாடு அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கோயில் நிர்வாகத்திலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

•மத்திய அரசை கண்டித்து தில்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திர்ணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் எம்பியை குண்டு கட்டாக தூக்கிச் சென்றதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

•உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் பங்கேற்க உள்ளன.

•சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையிலேயே தொடர்கிறது. 501-வது நாளாக பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (அக்.04) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

•“தன்மீது காவல்துறையில் புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகளுக்கு நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து நோட்டீஸ்” அனுப்பப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்