Car Free Cities: எங்களுக்கு கார் வேணாம் பாஸ்.. உலகில் கார் இல்லாத 9 அழகான நகரங்கள்!
Car Free Cities: எங்களுக்கு கார் வேணாம் பாஸ்.. உலகில் கார் இல்லாத 9 அழகான நகரங்கள் குறித்துப் பார்ப்போம்.

Car Free Cities: 2024ஆம் ஆண்டில், உலகில் கார்களின் எண்ணிக்கை 1.475 பில்லியனாக (1 பில்லியன் - 100 கோடி) வளர்ந்துள்ளது. அதாவது ஒவ்வொரு 5.5 மனிதர்களுக்கு ஒரு கார் அல்லது 1,000 மனிதர்களுக்கு 182 பேர் கார் வைத்திருக்கிறார்கள். ஒரு பொதுவான பயணிகள் வாகனம் ஆண்டுக்கு சுமார் 4.6 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. அந்த 4.6 மெட்ரிக் டன்களை 1.475 பில்லியன் கார்களால் பெருக்கினால், அதன் தொகை பயங்கரமாக மாறும்.
நம்மிடம் கார்கள் இல்லையென்றால், போக்குவரத்து நெரிசல்களும் ஹார்ன் சத்தங்களும் இல்லாமல் நாம் வாழ முடிந்தால் என்ன செய்வது? அது இப்போது சாத்தியமில்லாத கனவு போல் தோன்றலாம். ஆனால் உலகெங்கிலும் உள்ள சில நகரங்களில் மக்கள் கார்களைப் பயன்படுத்துவதில்லை.
உலக கார் இல்லாத தினத்தில், சில கார் இல்லாத நகரங்கள் பற்றிய பார்வை:
ஜெர்மாட் (சுவிட்சர்லாந்து): உலகில் பலரால் புகைப்படம் எடுக்கப்பட்ட மலைகளில் ஒன்றான மேட்டர்ஹார்னின் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஜெர்மாட் நகரம். இங்கு யாரும் காரைப் பயன்படுத்துவது கிடையாது. தனியார் வாகனங்களுக்கு, Täsch (Zermatt நகரில் இருந்து 5 கிமீ) என்னும் ஊர் வரை அனுமதிக்கப்படுகிறது. Täsch-இல், ஒருவர் ரயிலுக்கு மாறி ஜெர்மாட் நகருக்கு பயணம் செய்கிறார் (ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ரயில்கள் இயங்கும்). நீங்கள் நடந்தோ, குதிரை வண்டி மூலமோ, ஈடாக்ஸி மூலமோ, பைக் மூலமோ, இலவச ஈ-பஸ் மூலம் ஜெர்மாட் நகரைச் சுற்றி வரலாம்.