UNESCO World Heritage Centre: ’யுனெஸ்கோவுக்கு ஒரு மில்லியன் டாலர்களை இந்தியா வழங்கும்!’ அறிவிப்பால் அதிரடி காட்டிய மோடி!
இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம். கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் போன்ற பல பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் இந்தியா உதவுகிறது என மோடி பேச்சு

யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையத்திற்கு, இந்தியா சார்பில் ஒரு மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து உள்ளார்.
பாரம்பரியத்திற்கு பாதுகாப்பு
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற யுனொஸ்கோவின் 46-வது அமர்வைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, உலகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை இந்தியா தனது பொறுப்பாகக் கருதுவதாகவும், எனவே, இந்தியாவில் மட்டுமல்லாது, பாரம்பரியப் பாதுகாப்புக்கு ஆதரவளித்து வருவதாகவும் கூறினார்.
"உலகளாவிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை இந்தியா தனது பொறுப்பாகக் கருதுகிறது, எனவே, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம். கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் போன்ற பல பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் இந்தியா உதவுகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையத்திற்கு ஒரு மில்லியன் டாலர்களை வழங்குவதாக நான் அறிவித்துள்ளேன்" என்று பிரதமர் மோடி கூறினார்.