தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Line Of Control India Builds Infra Neat Lac

Line of Control : சீனாவின் மாதிரி கிராமங்களுக்கு இந்தியா பதிலடி

Priyadarshini R HT Tamil
Apr 14, 2023 07:35 AM IST

Indo - China Border : எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே இந்தியாவும் கட்டுமானங்களை நிறுவவுள்ளது. இது சீனாவின் மாதிரி கிராமங்களுக்கு தக்க பதிலடியாக இருக்கும் என்று கூறுப்படுகிறது.

இந்திய சீன எல்லையில் இந்தியா கிராமங்களை நிறுவுகிறது
இந்திய சீன எல்லையில் இந்தியா கிராமங்களை நிறுவுகிறது

ட்ரெண்டிங் செய்திகள்

சீனா மாதிரி கிராமங்கள் அல்லது ஷியோகாங் என எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் கட்டுமானங்களை நிறுவி வருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியா, அருணாச்சல பிரதேசத்தின் எல்லை கிராமங்களை சுற்றுலா தளங்களாக, சிவில் மற்றும் ராணுவத்துடன் சேர்ந்து உருவாக்க திட்டமிட்டுள்ளது என வளர்ச்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்தெடுப்பது மட்டும் நோக்கமல்ல, எல்லை கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்வதை நிறுத்தவும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நிலையற்ற தன்மை நிலவும்போது, இந்தியாவின் ஆதிக்கத்தை எல்லையில் நிறுவுவதை வலியுறுத்துவதாகவும் இது அமையும்.

இங்கு தங்கும் இடங்கள், மலையேற்றங்கள், முகாம் அமைக்க இடங்கள், சாகச விளையாட்டுகள் மற்றும் ஆன்மீக பயணங்கள் ஆகியவை அமைக்கப்படும் என்று அங்குள்ள பெயர் வெளியிட விரும்பாத மக்கள் தெரிவித்தனர்.

முதல் கிராமம் இந்திய - சீன எல்லையில் தெற்கு அருணாச்சல பிரதேசத்தின் காஹோவில் அமைந்துள்ளது. கிபிட்டோ, மீஷாயில் அமைக்கப்படும். அங்சாவ் மாவட்டத்திலும், மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் மற்றவை அமையும். மிஷிமி மற்றும் மேயர் பழங்குடியினருக்கு இருப்பிடங்களும் அமைக்கப்படும். இப்பகுதிகளை எளிதாக அடைவதற்கு ஏதுவாக ஹெலிபேட்கள் அமைக்கப்படும். திப்ருகாரில் இருந்து மக்கள் இங்கு ஹெலிகாப்டரில் வரும் வகை செய்யப்படும். சாகச விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் மக்களுக்கு ஒரு நல்ல சாகச சுற்றுலா அனுபவம் கிடைக்கும். உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சிறிது காலம் எடுத்துக்கொள்ள வேண்டிய வரும். சாலை போடும் பணிகள் நடைபெற்ற வருகிறது. மலையேற்ற பாதைகள் திறக்கப்பட்டுவிட்டன. பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அருணாச்சல பிரேதேசத்தின் முதல்வர் பேமா காண்டு தெரிவித்தார்.

இங்கு மீண்டும் மக்கள் குடியேறத்துவங்கிவிட்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷா தனது முதல் வருகையில் இந்த இடத்தின் இயற்கை எழிலை விளக்கி மற்ற இந்தியர்களை அனைவரையும் இங்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.

சீனா ஷியோகாங் 600 மாதிரி கிராமங்கள எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் அமைக்கிறது. அதை போர் ஏற்பட்டால் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அமைக்கிறது. தற்போது அங்குள்ள கிராமங்கள் காலியாகத்தான் உள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தார்கள். சீனாவின் மக்கள் லிபரேசன் ராணுவ (பிஎல்ஏ)த்தால் அமைக்கப்படும் இந்த கிராமங்களில் பெரும்பாலும் பல்வேறு கட்டுமானப்பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் பிஎல்ஏவின் தொழிலாளர்கள் எடுத்துக்கொள்வார்கள் அல்லது ராணுவப்படையினர் எடுத்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. எல்லைக்காட்டுப்பாட்டு கோட்டில் நமது ஆதிக்கத்திற்கு இங்கு கிராமங்கள் அமைப்பது தேவை என்று கூறப்படுகிறது. இது இங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் என்பதால் அவர்கள் இதை வரவேற்கிறார்கள்.

இதை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகத்தான் வைத்திருக்க முடிவெடுக்கபப்பட்டது. சீனா அங்கு ஆதிக்கத்தை தொடங்குவதையடுத்து நமக்கும் அப்பகுதிகளை வளர்ப்பது அவசியமாக்கிவிட்டாதாக கூறப்படுகிறது. இங்கு சுற்றுலா மட்டுமின்றி மின்சார திட்டங்களும் அங்குள்ள கிராமங்களுக்கு மின்சாரங்கள் வழங்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்