எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பில் வெற்றிக் கொடி நாட்டிய PURE EV நிறுவனம் IPO வெளியிட திட்டம்
IPO: 65 டீலர்கள் மூலம், 70,000 வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு முக்கிய வளர்ச்சிக் கதையை உருவாக்கி, 200 கோடியை ஈட்டியுள்ளது PURE EV. இந்தியச் சாலைகளில் சுற்றுச்சூழல் கேடு விளைவிக்காத மோட்டார்சைக்கிள்களை இயக்க வைத்ததில் இந்நிறுவனத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு.

PURE EV: எலக்ட்ரிக் பிரிவில் முன்னணி 2W பிராண்ட்டான PURE EV, 2025 நிதியாண்டில் IPO வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த காலாண்டில் இருந்து IPO திட்டங்கள் தொடர்பாக முக்கிய வணிக வங்கிகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஐஐடி ஹைதராபாத்தில் 2019 இல் நிறுவப்பட்டது, ஐஐடி பாம்பேயின் முன்னாள் மாணவர்களான நிஷாந்த் டோங்காரி மற்றும் பொறியியல் மற்றும் உற்பத்தியில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவரான ரோஹித் வதேரா, இணைந்து PURE EV-ஐ தொடங்கினர். 65 டீலர்கள் மூலம், 70,000 வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு முக்கிய வளர்ச்சிக் கதையை உருவாக்கி, 200 கோடியை ஈட்டியுள்ளது PURE EV. இந்தியச் சாலைகளில் சுற்றுச்சூழல் கேடு விளைவிக்காத மோட்டார்சைக்கிள்களை இயக்க வைத்ததில் இந்நிறுவனத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு.
PURE EV-ஐ மார்கியூ முதலீட்டாளர்கள் NATCO Pharma Family Office, Laurus Labs மூலம் ஆதரிக்கப்படுகிறது. மேலும், HT வென்ச்சர்ஸ், BCCL, UEPL, i-TIC ஐஐடி ஹைதராபாத் போன்றவையும் ஆதரிக்கிறது.
நிறுவனத்தின் ப்ராடக்ட் போர்ட்ஃபோலியோவில் 201 கிமீ மைலேஜ் கொண்ட ஸ்கூட்டர்கள் உள்ளன ePluto 7G MAX & ETRANCE Neo+, மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் மாடல்கள்: eTryst X மற்றும் ecoDryft-ஐ கொண்டுள்ளன. அனைத்தும் AI அடிப்படையிலான X-Platform மேம்பட்ட ஓட்டுநர் அம்சங்கள், கிளவுட் விழிப்பூட்டல்கள் மற்றும் நீண்ட மைலேஜ் ஆகியவற்றை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.