தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kushboo Health: குஷ்புவுக்கு அடினோ வைரஸ் தாக்கம் - தீவிர காய்ச்சல்!

Kushboo Health: குஷ்புவுக்கு அடினோ வைரஸ் தாக்கம் - தீவிர காய்ச்சல்!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 08, 2023 01:10 PM IST

நடிகை குஷ்புவுக்கு அடினோ வைரஸ் தொற்று தாக்கத்தால் தீவிர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

குஷ்பு
குஷ்பு

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது குஷ்புவுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து நடிகை குஷ்பு தான் சிகிச்சை பெற்று வரும் ஃபோட்டோக்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்," எனக்குக் காய்ச்சல், தொண்டை வலி, சோம்பல் ஏற்பட்டுள்ளதால் சிறந்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எனது உடல்நிலை தேறி வருகிறது. எனது ரசிகர்கள் யாரும் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எனது உடல்நிலை சீராகச் சிறிது நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்புவுக்கு அடினோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பு 90 காலகட்டத்தில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர். அப்போது இருந்த இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர். தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். மேலும் சின்னதிரையிலும் பிரபலமாக இருந்து வருகிறார்.

அரசியல் பக்கம் தனது வாழ்க்கையைத் திருப்பிய நடிகை குஷ்பு, பல கட்சிகளில் பயணம் செய்த இவர் பாஜக கட்சியில் இணைந்த பிறகு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

திடீரென நடிகை குஷ்புவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் திரைத்துறையினர் மட்டுமல்லாமல் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்