Bitcoin scam: பசவராஜ் பொம்மையின் பிட் காயின் ஊழல்! விசாரணைக்கு உத்தரவிட்ட காங்கிரஸ் முடிவுக்கு பாஜக வரவேற்பு!
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்பட பல பாஜக நிர்வாகிகள் சட்டவிரோதமாக பணத்தை பிட்காயினில் முதலீடு செய்ததாக எஉழ்ந்த புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அம்மாநில பாஜக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “பிட் காயின் ஊழல் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு கமிஷனர் பி தயானந்தா இந்த விவகாரம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிடுமாறு அரசிடம் கேட்டுக் கொண்டார். ஏடிஜிபி மணீஷ் கர்பிகர் தலைமையில் இந்த விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிட் காயின் ஊழல் குறித்து மீண்டும் விசாரணை நடத்துவோம் என்று கர்நாடக மக்களுக்கு உறுதி அளித்து இருந்தோம். அதன்படி சிஐடியின் கீழ் நாங்கள் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்றும் பரமேஸ்வரா தெரிவித்தார்.
கர்நாடக அரசின் இந்த முடிவு குறித்து பதில் அளித்துள்ள பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.என்.அஷ்வத் நாராயணா “எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு முடிவு செய்யப்படும். 2013-18ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்தும் சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் பிட் காயின் ஊழல் தொடர்பான சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை வரவேற்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.