Karnataka Election Results: ’இதுவரை எந்த கட்சியும் என்னிடம் பேசவில்லை’ எச்.டி.குமாராசாமி பேட்டி
”கடந்த தேர்தலில் வெறும் 37 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்த குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் முதலமைச்சராக இருந்தவர்”
இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சி தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக 2615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக ஊடகங்களிடம் பேசிய குமாரசாமி, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு கிட்டத்தட்ட 30 முதல் 32 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான வெற்றி கிடைக்கும் என்றும் கணித்துள்ளனர். இந்த கருத்து கணிப்புகள் குறித்த அவர்கள் விருப்பங்களை ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த 2-3 மணி நேரத்தில், அது தெளிவாகிவிடும் என கூறினார்.
மேலும், நான் ஒரு சிறிய கட்சி, அங்கு, எனக்கு எந்த தேவையும் இல்லை... நான் ஒரு நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறேன். இதுவரை யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. முதலில் இறுதி முடிவுகளைப் பார்ப்போம் என்று குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தொங்கு சட்டசபை அமையும் என நான்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுவதால், இது ஜேடிஎஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில கருத்துக் கணிப்புகளும் பாஜக ஆட்சி அமைப்பதில் முன்னிலையில் இருப்பதாகக் கூறுகின்றன.
கர்நாடகாவில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள், ஜனதா தளம்-மதச்சார்பற்ற JD(S) 2018 தேர்தலில் பெற்ற 37 இடங்களை தொடாது, ஆனால் மாநிலத்தில் வலுவான பிராந்திய வீரராகத் தொடரும் என்று கணித்துள்ளது.
கடந்த தேர்தலில் வெறும் 37 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்த குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் முதலமைச்சராக இருந்தவர்.
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைந்தால், ஜே.டி.எஸ்., கிங்மேக்கராக உருவாக வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கர்நாடகாவில் 1985ஆம் ஆண்டுக்கு பிறகு ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.