Karnataka Election Results: தமிழ்நாட்டுக்கு வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்? மாமல்லபுரத்தில் ரிசார்ட் ரெடி…!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Election Results: தமிழ்நாட்டுக்கு வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்? மாமல்லபுரத்தில் ரிசார்ட் ரெடி…!

Karnataka Election Results: தமிழ்நாட்டுக்கு வரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்? மாமல்லபுரத்தில் ரிசார்ட் ரெடி…!

Kathiravan V HT Tamil
May 13, 2023 12:53 PM IST

கர்நாடகாவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாமல்லபுரம் - கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார்
மாமல்லபுரம் - கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார்

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான டி.கே.சிவக்குமார் கனகபுராவிலும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர். 

யாரையும் சாராமல் சொந்த பலத்திலேயே காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறி இருந்தார். 

கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தாலும் சுதந்திரமாக ஆட்சியை நடத்த 140 தொகுதிகள் வரை வெற்றி பெற வேண்டும் என கருதுகிறது. 

கர்நாடகாவில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். தேர்தலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார் ”காங்கிரஸ் கட்சி உறுதியாக 141 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் 130க்கும் குறைவான இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் தங்கவைக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசாமல் தடுப்பதற்காக வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று மாலைக்குள் தலைநகரான பெங்களூருவுக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் தேசிய தலைவர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் தேர்தல் பணிக்காக நியமனம் செய்துள்ளது.

பெங்களூருவில் உள்ள ஷாங்கிரிலா ஹோட்டலில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில் அக்கட்சி 130க்கும் குறைவான இடங்களைப் பெற்றால், தமிழ்நாட்டின் மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் எம்.எல்.ஏக்களை தங்கவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.