Karnataka Election Result: ‘என் அப்பா முதல்வராக வேண்டும்’-ரிசல்ட் வரும் முன்பே துண்டு போட்ட சித்தராமையா மகன்…!
”பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற எதையும் செய்வோம்”
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆட்சியில் இருக்கும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த வரலாறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வரும் நிலையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவின் மகன் யத்தீந்திர சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாங்கள் பெரும்பான்மை பெறுவோம் என்பதில் நம்பிக்கையாக உள்ளோம். எந்த கட்சியின் கூட்டணியும் தேவைப்பட்டாது என்று நான் நினைக்கிறேன். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற எதையும் செய்வோம் என்றார்.
உங்கள் தந்தை சித்தராமையா முதலமைச்சராக விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, ஒரு மகனாக எனது தந்தை முதலமைச்சர் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறேன். கடந்த கால ஆட்சியில் அவர் சிறந்த அரசாகத்தை கொடுத்தார். இந்த விருப்பம் மக்களுக்கும் இருந்தால் அவர் நிச்சயம் முதலமைச்சர் ஆவர் என யத்தீந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் அரசியல் வாரிசாக முதலில் கருதப்பட்ட அவரது மூத்த சகோதரர் ராகேஷ் சித்தராமையாவின் மரணத்திற்குப் பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு மருத்துவர் தொழிலை விட்டு விலகி அரசியலில் நுழைந்தவர் யதீந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.