Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?
Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கிறது என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இது உண்மைதானா என்பதை பார்ப்போம்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.
Claim Review:பத்தாம் வகுப்பு மாணவர்கர்ளுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக வைரலாகும் தகவல்
Claimed By: Social Media Users
Claim Reviewed By: NewsMeter
Claim Source: Facebook, X
Claim Fact Check: False
“அனைவருக்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கர்ளின் பெற்றோர்கர்ளுக்கு இந்தச் செய்தி. பிரதமர் மோடி அவர்கர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார். 75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்கர்ளுக்கு ரூ.10000/_ ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெற்ற 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.25000/_ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும். இந்தப் பதிவை தவிர்த்துவிடாமல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்தச் செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்கர்ளே. இந்தத் தகவல் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது உண்மையா?
இத்தகவல் உண்மை தானா என்பதை கண்டறிய இதுகுறித்து மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இவ்வாறான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா என்று நியூஸ் மீட்டர் செய்தியாளர்கள் குழு தேடியது. அப்போது, அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் 10ஆம் வகுப்பு மாணவர்கர்ளுக்கு எந்த ஒரு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், “எஸ்எஸ்எல்சியில் 75% மற்றும் 12ஆம் வகுப்பில் 85% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கர்ளுக்கு ரூ.10,000 மற்றும் ரூ. 25,000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் என்ற தகவலை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவறான தகவல் என்றும் கூறியுள்ளதாக” என்று The Hindu ஊடகம் கடந்த மே 16ஆம் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, இதனை உறுதிப்படுத்தும் விதமாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இது தொடர்பார்க PIB Fact Check எக்ஸ் பதிவை வெளியிட்டுட் ள்ளது. அதில், “முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் 10 அல்லது 12ஆம் வகுப்பு மாணவர்கர்ளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. எனவே, இவ்வாறாக வைரலாகும் செய்தி தவறானது” என்று கூறப்பட்டுள்ளது.
நியூஸ் மீட்டரின் தேடலின் முடிவாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக வைரலாகும் தகவல் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.
பொறுப்புத் துறப்பு
இந்தச் செய்தி முதலில் Newsmeter இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
டாபிக்ஸ்