200க்கும் மேற்பட்ட குரங்கு இனங்கள்! வேடிக்கையாக உருவான சர்வதேச குரங்குகள் நாள்.. அறிந்ததும், அறியாததும்
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட குரங்கு இனங்கள் இருக்கின்றன. மனித இனத்தின் பிறப்பிடமாக கருதப்படும் குரங்குகள் பற்றியும் அதன் அழிவை தடுக்க விழப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் சர்வதேச குரங்குகள் தினம் இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் வாழும் உயிரினங்களில் ஒன்றாக குரங்குகள் இருந்து வருகின்றன. அதன்படி சுமார் 260 வகையான குரங்குகள் ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் வாழ்கின்றன. குரங்குகள் பிக்மி மார்மோசெட் போன்ற வெறும் அவுன்ஸ் அளவு முதல் 80 பவுண்டுகள் கனமான மாண்ட்ரில் வகை வரை இருக்கின்றன.
மனித இனத்தின் பிறப்பிடமாக கருத்தப்படும் விலங்காக இருந்து வரும் குரங்குகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், அவற்றின் அறிய வகை இனங்களை பாதுகாப்பதன் பொருட்டும் ஆண்டுதோறும் டிசம்பர் 14ஆம் தேதி சர்வதேச குரங்கு தினம் கொண்டாடப்படுகிறது.
குரங்கு தினமானது, இந்த விலங்குகள் எதிர்கொள்ளும் தற்போதைய அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்மித்சோனியன் நிறுவனம், நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் கிரீன்பீஸ் போன்ற பல நிறுவனங்களும் குரங்கு தினத்தை ஊக்குவிக்கின்றன.
