தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 1999!’ திருப்புமுனை தந்த கார்கில் போர்! மீண்டும் ஆட்சியை பிடித்த வாஜ்பாய்!

HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 1999!’ திருப்புமுனை தந்த கார்கில் போர்! மீண்டும் ஆட்சியை பிடித்த வாஜ்பாய்!

Kathiravan V HT Tamil
Feb 17, 2024 05:50 AM IST

“Lok sabha Election 1999: 1999ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட கார்கில் போர் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.”

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 1999
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் 1999

ட்ரெண்டிங் செய்திகள்

இந்திய குடியரசு

நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக!

1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 161 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 140 இடங்கள் மட்டுமே கிடைத்து. ஜனதா தளம் 46 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 32 இடங்களிலும் வென்றது.

13 நாட்களே பிரதமராக இருந்த வாஜ்பாய்

தனிப்பெரும் கட்சியான பாஜகவை முறைப்படி ஆட்சி அமைக்க அழைத்த குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, 2 வாரங்களில் நாடாளுமன்றத்தில் பெருமான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார்.

இதன்படி 1996 மே மாதம் 15ஆம் தேதி பிரதமர் ஆக அடல் பிகாரி வாஜ்பாய் பதவி ஏற்றார். மாநிலக் கட்சிகளின் ஆதரவை பெற பாஜக பெரும் முயற்சி செய்ததது. இருப்பினும் அது கைக்கொடுக்கவில்லை.

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை வாஜ்பாய் பெறத் தவறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே வாஜ்பாய் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

தேவகவுடா முதல் குஜ்ரால் வரை!

இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க மறுத்தது. ஜனதாதள கட்சி தலைவரும், கர்நாடக முதலமைச்சராகவும் இருந்த ஹெச்.டி.தேவகவுடா பிரதமர் ஆனார். இருப்பினும் தேவகவுடா அரசுக்கு காங்கிரஸ் அளித்து வத ஆதரவை வாபஸ் பெற்றதால் 324 நாட்கள் பிரதமர் ஆக இருந்த தேவகவுடா பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆக பொறுப்பேற்றார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி திமுகவை அமைச்சரவையில் இருந்து விலக்க கோரி காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுத்தது. இதனை ஏற்க மறுத்த ஐ.கே.குஜ்ரால் 332 நாட்களில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 1998ஆம் ஆண்டு நாடு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் கட்டாயத்திற்கு ஆளானது.

ஆட்சியை இழந்த வாஜ்பாய்!

தெலுங்கு தேசம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆக வாஜ்பாய் பொறுப்பேற்றார். இருப்பினும், 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றதால் நாடாளுமன்றத்தில் ஆட்சி கவிழ்ந்து புதிய தேர்தலுக்கு வித்திட்டது.

திருப்பு முனை தந்த கார்க்கில் போர்!

மத்திய அரசு கலைந்த நிலையில் காபந்து பிரதமர் ஆக வாஜ்பாய் இருந்தார்.  1999ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பாகிஸ்தான் உடன் ஏற்பட்ட கார்கில் போர் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.  ஜுலை 26ஆம் தேதி வரை நீடித்த இந்த போரில் இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்தது. 

நாடாளுமன்றத் தேர்தல் 1999

இதனை அடுத்து செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 182 தொகுதிகளில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வென்று இருந்தது. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் முறையாக திமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தேர்தலை சந்தித்தது. அதில், திமுக 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும், எம்ஜிஆர் அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. அதிமுக, காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் வென்றது.

தமிழ்நாட்டை சேர்ந்த ரங்கரஜன் குமார மங்கலம், முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள்.  மு.கண்ணப்பன், என்.டி.சண்முகம், செஞ்சி ராமச்சந்திரன், ஆ.ராசா, பொன்னுசாமி ஆகியோர் இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

IPL_Entry_Point