HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 1998!’ ஆட்சி அமைத்த வாஜ்பாய்! ஆட்சியை கலைத்த ஜெயலலிதா!
”Lok Sabha Election 1998: திமுக ஆட்சியை கலைக்க வேண்டும், தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை முடிக்க வேண்டும் உள்ளிட்ட ஜெயலலிதாவின் கோரிக்கைகளை மத்தியில் இருந்த பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்பதால் ஜெயலலிதா இந்த முடிவை எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்”
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
இந்திய குடியரசு
நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக!
1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 161 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 140 இடங்கள் மட்டுமே கிடைத்து. ஜனதா தளம் 46 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 32 இடங்களிலும் வென்றது.
13 நாட்களே பிரதமராக இருந்த வாஜ்பாய்
தனிப்பெரும் கட்சியான பாஜகவை முறைப்படி ஆட்சி அமைக்க அழைத்த குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, 2 வாரங்களில் நாடாளுமன்றத்தில் பெருமான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார்.
இதன்படி 1996 மே மாதம் 15ஆம் தேதி பிரதமர் ஆக அடல் பிகாரி வாஜ்பாய் பதவி ஏற்றார். மாநிலக் கட்சிகளின் ஆதரவை பெற பாஜக பெரும் முயற்சி செய்ததது. இருப்பினும் அது கைக்கொடுக்கவில்லை.
பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை வாஜ்பாய் பெறத் தவறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே வாஜ்பாய் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
தேவகவுடா முதல் குஜ்ரால் வரை!
இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க மறுத்தது. ஜனதாதள கட்சி தலைவரும், கர்நாடக முதலமைச்சராகவும் இருந்த ஹெச்.டி.தேவகவுடா பிரதமர் ஆனார். இருப்பினும் தேவகவுடா அரசுக்கு காங்கிரஸ் அளித்து வத ஆதரவை வாபஸ் பெற்றதால் 324 நாட்கள் பிரதமர் ஆக இருந்த தேவகவுடா பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் ஐ.கே.குஜ்ரால் பிரதமர் ஆக பொறுப்பேற்றார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி திமுகவை அமைச்சரவையில் இருந்து விலக்க கோரி காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுத்தது. இதனை ஏற்க மறுத்த ஐ.கே.குஜ்ரால் 332 நாட்களில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 1998ஆம் ஆண்டு நாடு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் கட்டாயத்திற்கு ஆளானது.
தனிப்பெரும் கட்சியான பாஜக!
இதனால் 12ஆவது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 182 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான அரிதி பெருமான்மையை அக்கட்சியால் பெற இயலவில்லை. காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 31 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி 20 தொகுதிகளிலும் வென்றது.
அமோக வெற்றி பெற்ற அதிமுக-பாஜக கூட்டணி
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாஜக, மதிமுக, பாமக, தமிழக ஜனதா கட்சி, தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ், தமாக, சிபிஐ கட்சிகள் இணைந்து மற்றொரு அணியில் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் 30 தொகுதிகளில் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 9 இடங்களில் திமுக கூட்டணி வென்றது.
வாஜ்பாய் ஆட்சியை கலைத்த ஜெயலலிதா!
தெலுங்கு தேசம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆக வாஜ்பாய் பொறுப்பேற்றார். இருப்பினும், 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றதால் நாடாளுமன்றத்தில் ஆட்சி கவிழ்ந்து புதிய தேர்தலுக்கு வித்திட்டது.
மிழ்நாட்டில் நடந்து இருந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை கலைக்க வேண்டும், தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை முடிக்க வேண்டும் உள்ளிட்ட ஜெயலலிதாவின் கோரிக்கைகளை மத்தியில் இருந்த பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்பதால் ஜெயலலிதா இந்த முடிவை எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.