HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 1980!’ உட்கட்சி மோதாலால் கவிழ்ந்த ஜனதா! மீண்டும் அரியணை ஏறிய இந்திரா!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 1980!’ உட்கட்சி மோதாலால் கவிழ்ந்த ஜனதா! மீண்டும் அரியணை ஏறிய இந்திரா!

HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 1980!’ உட்கட்சி மோதாலால் கவிழ்ந்த ஜனதா! மீண்டும் அரியணை ஏறிய இந்திரா!

Kathiravan V HT Tamil
Feb 09, 2024 08:55 AM IST

”Lok sabha Election 1980: ஜனதா கட்சியில் இருந்த இந்துத்துவவாதிகளுக்கும், சோஷியலிஸ்டுகளுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதன் விளைவாக மதசார்பற்ற ஜனதா என்ற புதிய கட்சி உருவானது!”

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு 1980
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு 1980

இந்திய குடியரசு

நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.

காங்கிரஸின் தொடர் வெற்றிகள்

1952, 1957, 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத்தேர்தல்களில் வென்று ஜவஹர்லால் நேரு பிரதமர் ஆக இருந்தார். 1964 ஆம் ஆண்டு நேரு இறந்த நிலையில் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆகி இருந்தார். 1967, 1971 ஆகியத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 

அவசரநிலை பிரகடனமும் ஜனதா ஆட்சியும்!

ஆனால் 1975ஆம் ஆண்டு அவர் அமல்படுத்திய அவசர நிலை பிரகடனம் காரணமாக 1977ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஸ்தாபன காங்கிரஸ், பாரதீய ஜனசங்கம், பாரதீய லோக்தளம், சோசலிசக் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. சுதந்திர இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் ஆக ஜனதாதளம் கட்சியின் மொரார்ஜி தேசாய் பதவி ஏற்றார். 

பதவி விலகிய மொரார்ஜி 

இருப்பினும் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை, ஜனதா கட்சியில் இருந்த இந்துத்துவவாதிகளுக்கும், சோஷியலிஸ்டுகளுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதனால் 1979ஆம் ஆண்டு உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். 

கவிழ்ந்த சரண் சிங் அரசு

ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவுகளின் ஆதரவை பெற்ற சரண்சிங் பிரதமர் ஆனார், அவருக்கு இந்திரா காந்தி ஆதரவு அளிப்பதாக கூறிய நிலையில், கடைசி நேரத்தில் ஆதரவு தரப்படாததால் நாடாளுமன்றத்திற்கு செல்லாமலேயே சரண் சிங் அரசு கவிழ்ந்தது. 

மதசார்பற்ற ஜனதா உருவாக்கம்! 

மேலும் நெருக்கடி நிலை பிரகடனத்தில் செய்யப்பட்ட அடக்குமுறை காரணமாக இந்திரா காந்தி மீது தொடர் வழக்குகள் போடப்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்திகளை உருவாக்கி இருந்தது. ஜனதா கட்சி இரண்டாக பிரிந்து மதசார்பற்ற ஜனதா  என்ற புதிய கட்சி உருவானது. 

மீண்டும் ஆட்சியை பிடித்த இந்திரா!

1980 தேர்தலுக்கு முன்னதாக, இந்திரா காந்தி, தனது கட்சியின் தோல்வியால் துவண்டுவிடாமல், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார். 

மொத்தமுள்ள 518 தொகுதிகளில் 351 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி உடன் இணைந்து தேர்தலை சந்தித்த, திமுக 15 இடங்களை வென்றது. ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட அதிமுக வெறும் இரண்டு இடங்களை மட்டுமே வென்றது.  

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் அலை வீசிய நிலை மாறி நிலையான ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சியே தேவை என்ற நிலை உருவானது. இந்த தேவை இந்திரா காந்தி மீண்டும் அரசியல் அதிகாரத்தை பிடிப்பதற்உ அச்சாரம் அமைத்தது. 

Whats_app_banner
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.