தீண்டாமையால் சாகும் நிலை சென்ற சிறுவன்.. வாடகை வீட்டில் அடித்து விரட்டப்பட்ட அம்பேத்கர்.. உலுக்கிய சம்பவம்
BR Ambedkar: அம்பேத்கர் மிகப்பெரிய கடுமையான பாதைகளை கடந்து வந்திருக்கின்றார். அந்த பாதையில் சாதிய கொடுமையால் இவர் அனுபவித்த கொடூரங்கள் எத்தனையோ உள்ளன. ஆனால் இவரது வாழ்க்கையை புரட்டி போட்ட இரண்டு சம்பவங்கள் குறித்து இங்கு காண்போம்.
Dr. B.R. Ambedkar: அம்பேத்கர், இந்திய வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத பெயர். 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் பிறந்தவர். இவரைப் பற்றி தெரியாதவர்கள் இருந்திருக்க முடியாது. சிறு வயது தொடங்கி சாகும்வரை சமூகத்தில் இருக்கக்கூடிய பாகுபாடுகளுக்கு எதிராக போர் குரல் கொடுத்தவர் இவர்.
இப்போது இருக்கக்கூடிய குழந்தைகளிடம் அம்பேத்கர் யார் என்று கேட்டால் தெரியும். ஆனால் இவர் எப்படிப்பட்டவர் என யாருக்கும் தெரியாது. என்ன செய்திருக்கிறார் என்று கேட்டால் முழுமையாக தெரியாது. இன்று வரை அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கக்கூடிய இடத்தில் அம்பேத்கர் இருந்து வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது.
BR Ambedkar: சாதியினால் ஒரு வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு சிறுவன் எழுந்து மீண்டும் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியது தான் இவருடைய கதை. கதை என்ற வார்த்தையால் ஒரு சரித்திரத்தை அவ்வளவு எளிதில் முடித்து விட முடியாது. சாதிய கூட்டத்தில் சிக்கி ஒதுக்கப்பட்டு தீண்ட தகாதவராக வாழ்ந்தவர் எப்படி அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றினார் என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.
அம்பேத்கர் பற்றி படித்து தெரிந்தவர்களுக்கு இதைப் பற்றி கூறத் தேவையில்லை. ஆனால் அவரைப் பற்றிய முக்கியமான சம்பவங்கள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்து வருகிறது. ஏனென்றால் தற்போது நாம் பின்பற்றி வரும் சட்டதிட்டங்கள் அனைத்தும் இவரால் இயற்றப்பட்டது.
அப்படிப்பட்ட அம்பேத்கர் மிகப்பெரிய கடுமையான பாதைகளை கடந்து வந்திருக்கின்றார். அந்த பாதையில் சாதிய கொடுமையால் இவர் அனுபவித்த கொடூரங்கள் எத்தனையோ உள்ளன. ஆனால் இவரது வாழ்க்கையை புரட்டி போட்ட இரண்டு சம்பவங்கள் குறித்து இங்கு காண்போம்.
அறியாத வயதில் தீண்டாமையில் சிக்கிய சிறுவன்
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் தந்தை ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவரது பெற்றோருக்கு 14வது குழந்தையாக பிறந்தவர்தான் அம்பேத்கர். அப்போது ஒரு சமயம் அம்பேத்கரின் தந்தை கோரேக்காவில் பணி நியமனம் செய்யப்பட்டார். அப்போது அனைத்து குழந்தைகளுக்கும் கோரேக்காவுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் எந்த ரயிலில் குழந்தைகள் வருகிறார்கள் என்று அம்பேத்கரின் தந்தை அறியவில்லை. அந்த செய்தியும் அவருக்கு கிடைக்கவில்லை. அதன் காரணமாக ரயில் நிலையத்தில் யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டுள்ளனர் குழந்தைகள். அங்கு இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் நீங்கள் யார் என அவர்களிடம் கேட்டுள்ளார். அந்த குழந்தைகள் இது குறித்து கூறிய போது அவர்கள் அனைவரும் மஹர் என்ற சாதியை சேர்ந்தவர்கள் என கண்டுபிடித்துள்ளார்.
அதனால அந்த ஸ்டேஷன் மாஸ்டர் அவர்கள் தீண்ட தகாதவர்கள் எனக்கு ஊறி அவர்களை விட்டு தள்ளிச் சென்றார். அதன் பின்னர் இந்த குழந்தைகள் சிரமப்பட்டு மாட்டுவண்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். மாட்டு வண்டியில் வந்து கொண்டிருக்கும் பொழுது குழந்தைகள் பேசிக் கொண்டிருந்தது கேட்ட மாட்டு வண்டி ஓட்டுநர் அவர்கள் அனைவரும் மஹர் இனத்தைச் சேர்ந்தவர் என கண்டுபிடித்துள்ளார்.
உடனே அவர் அந்த குழந்தைகள் அனைவரையும் வண்டியில் இருந்து இறக்கி விட்டார். இரவு நேரம் வந்துவிட்ட காரணத்தினால் அந்த குழந்தைகள் உங்களுக்கு நாங்கள் இரண்டு மடங்கு பணம் கொடுக்கின்றோம் எனக் கூறியுள்ளனர். அதன் பின்னர் மாட்டு வண்டிக்காரர் அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார்.
இருப்பினும் குழந்தைகள் வண்டியை ஓட்ட வேண்டும். நான் உங்களை தொடாமல் பின் தொடர்ந்து வருவேன் என மாட்டு வண்டிக்காரன் நிபந்தனை போட்டுள்ளார். அது கோடை காலம் என்கின்ற காரணத்தினால் வரும் வழியெங்கும் குழந்தைகள் மிகவும் தாகமாக இருந்துள்ளனர். இருப்பினும் யாரும் அவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. மறுநாள் மிகவும் மோசமான நிலையில் தங்களது வீட்டை அந்த குழந்தைகள் அடைந்துள்ளனர். இது மிகப்பெரிய தாக்கத்தை அம்பேத்கருக்கு ஏற்படுத்தி உள்ளது.
வீடு இல்லாமல் திரிந்த பட்டதாரி
மிகவும் கடினமான சூழ்நிலையில் வெளிநாட்டிற்கு சென்று அம்பேத்கர் தனது படிப்பை முடித்துவிட்டு நமது நாட்டிற்கு வந்தார். அதன் பின்னர் பரோடா செயலகத்தில் 1913 ஆம் ஆண்டு அம்பேத்கருக்கு வேலை கிடைத்துள்ளது. இவர் தீண்டத்தகாத ஜாதி என்று கூறக்கூடியவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் அலுவலகத்தின் பியூன்கள் கூட கோப்புகளை அவரிடம் தூரத்தில் தள்ளி வைத்து விட்டு சென்று விடுவார்கள்.
இவர் தீண்ட தகாத ஜாதியை சேர்ந்தவர் என்ற காரணத்தினால் வாடகைக்கு வீடு கூட யாரும் கொடுக்கவில்லை. அதன் பின்னர் பாபா சாஹேப் பார்சி என தனது பெயரை மாற்றிக்கொண்டு பார்சி விடுதி ஒன்றில் பணம் கொடுத்து வாடகைக்கு அம்பேத்கர் வாழ்ந்து வந்தார். 10 நாட்கள் கூட தாண்டவில்லை அவர் தங்கியிருந்த அறையின் வெளியே ஒரு மிகப்பெரிய கூட்டம் கையில் கம்புகளோடு வந்து நின்றனர்.
தீண்டத்தகாத நீ இந்த விடுதியில் தங்கி இதனை மாசுபடுத்தி விட்டாய் என அனைவரும் திட்டியுள்ளனர். அதன் பின்னர் அந்த விடுதியில் இருந்து வெளியேறி அம்பேத்கர் தனது கிறிஸ்துவ நண்பர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அதே சமயம் அங்கு சுற்றி இருந்த மக்களும் இவர் தீண்டத்தகாத சாதியினை சேர்ந்தவர் எனக்கூறி அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அதற்குப் பிறகு பரோடாவில் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஒரே நாளில் பம்பாய் வந்து சேர்ந்தார் அம்பேத்கர். மனதளவில் வெகுவாக பாதித்த அம்பேத்கர் புரட்சியாளராக உருவெடுக்க இந்த சம்பவங்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தன.
இன்றோடு அம்பேத்கர் மறைந்து 68 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும் தீண்டாமைக்கு எதிராக இவர் எழுப்பிய நெருப்பு இன்று வரை அணியாமல் இருந்து கொண்டிருக்கின்றது. பாபா சாகேப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்ற பெயர் வரலாற்றின் சரித்திர குறியீடு என்று கூறினால் அது மிகையாகாது.
டாபிக்ஸ்