எட்டாத உயரத்தில் தங்கமே தங்கம்.. 2025ல் தங்கம் விலை தாறுமாறாக ஏறப் போகுதாமே.. சும்மா அதிர வைக்கும் உலக தங்க கவுன்சில்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  எட்டாத உயரத்தில் தங்கமே தங்கம்.. 2025ல் தங்கம் விலை தாறுமாறாக ஏறப் போகுதாமே.. சும்மா அதிர வைக்கும் உலக தங்க கவுன்சில்!

எட்டாத உயரத்தில் தங்கமே தங்கம்.. 2025ல் தங்கம் விலை தாறுமாறாக ஏறப் போகுதாமே.. சும்மா அதிர வைக்கும் உலக தங்க கவுன்சில்!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 17, 2024 06:30 AM IST

தங்கம் விலையில் சற்று ஸ்திரத்தன்மை நிலவுகிறது என்ற போதிலும் இந்த விலை உயர்வு என்பது தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்களுக்கு இந்த ஒரேயொரு ஆண்டில் இருபது சதவீதத்தை தாண்டி லாபம் சம்பாதித்து கொடுத்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

எட்டாத உயரத்தில் தங்கமே தங்கம்.. 2025ல் தங்கம் விலை தாறுமாறாக ஏறப் போகுதாமே.. சும்மா அதிர வைக்கும் உலக தங்க கவுன்சில்!
எட்டாத உயரத்தில் தங்கமே தங்கம்.. 2025ல் தங்கம் விலை தாறுமாறாக ஏறப் போகுதாமே.. சும்மா அதிர வைக்கும் உலக தங்க கவுன்சில்!

20 சதவீதத்தை தாண்டி லாபம் தந்த தங்கம்

கடந்த ஜனவரி 2024 ஜனவரி முதல் தேதியில் சென்னையில் 22காரட் ஆபரண தங்க விலை கிராம் ஒன்றுக்கு 5910 ஆகவும் சவரனுக்கு 47280 ஆக இருந்தது. இதே ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ஏழாயிரத்து நூறு என்ற விலையைத் தாண்டி விட்டது. தங்கம் விலையில் சற்று ஸ்திரத்தன்மை நிலவுகிறது என்ற போதிலும் இந்த விலை உயர்வு என்பது தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்களுக்கு இந்த ஒரேயொரு ஆண்டில் இருபது சதவீதத்தை தாண்டி லாபம் சம்பாதித்து கொடுத்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இது வங்கிகள் தரும் வட்டியை விடவும் மும்மடங்கு அதிக லாபத்தை சம்பாதித்து கொடுத்து இருக்கிறது என்று சொல்லலாம்.

தங்கத்தின் விலை பல்வேறு நாடுகளில் நிலவும் பொருளாதாரம் வங்கிகளின் முக்கிய முடிவுகள் சர்வதேச அரசியல் என்று பல்வேறு காரணங்களை ஒட்டியும் தேவை கருதியும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது . இந்த வருடம் தங்க விலை உயர்வுக்கு ரஷ்யா உக்ரைன் இடையில் உள்ள போர், ஈரான் - இஸ்ரேல் நாடுகளிடையே நடந்த பதற்றம், அமெரிக்கா அதிபர் தேர்தல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றது. சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் தங்கள் நாட்டு தங்கத்தின் கையிருப்பை உயர்த்தி கொள்ள டன் கணக்கில் கொள்முதல் செய்ததால் ஏற்பட்ட டிமாண்ட் என்று பல்வேறு காரணங்களால் விலையில் ஏற்றம் தொடர்ந்து இருந்தது. அமெரிக்க தேர்தலில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் டொனால்ட் டிரம்ப் அவர்களின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை. அவர் எடுக்க போகும் சீரமைப்பு நடவடிக்கைகள் அமெரிக்கா வங்கி வட்டி விகித மாற்றங்கள், பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம், வேலை பற்றாக்குறை என்று பல விசயங்கள் வரும் காலத்தில் தங்க விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா இந்தியா போன்ற நாடுகளும் மக்களும் அதிக அளவில் தங்கம் வாங்கும் முக்கிய சந்தையாக உள்ளது. தங்கம் கிடைப்பது குறைந்து விட்டதும் உற்பத்தி செலவு மிகவும் அதிகமான அளவு உயர்ந்திருப்பதும் மிக முக்கிய அம்சங்கள் ஆகும். தங்கம் என்பதற்கு மாற்றாக எந்த உலோகமும் கண்டறியப் படாமல் இருப்பது முக்கியமாக உள்ளது எனலாம்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் கலாச்சார நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளில் தங்கத்தின் தேவை அதிகரித்து கொண்டே இருப்பதால் தங்கத்தின் மீதான மதிப்பு மக்களிடையே பெரும் மோகமாக மாறி வருகிறது. நினைத்த மாத்திரத்தில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அவசர காலங்களில் தங்கம் மட்டுமே எளிதாக பணமாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதால் இந்த மஞ்சள் உலோகம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கிறது.

2025ல் தங்கம் நிலவரம்

வரும் 2025 ஆண்டில் இந்த சூழ்நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டில் இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் படிப்படியாக உயர வாய்ப்பு அதிகம் உள்ளதாக தங்க சந்தையில் கணிப்பு நிலவுகிறது. உலகளவிலான தங்க கவுன்சில் அடுத்த ஆண்டில் தங்க விலை மிதமான உயர்வு காண வாய்ப்பு உள்ளது என்று கணித்துள்ளது. இந்த அளவுக்கு உயரும் பட்சத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை இந்தியாவில் சவரனுக்கு எழுபத்தைந்து ஆயிரம் ரூபாயை தாண்டும் வாய்ப்பு உள்ளது கணிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்ததில் எப்படியும் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் தங்கத்தின் விலை உயர்வு குறிப்பிடப்படும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.