தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Explainer : கோவாவில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் பற்றி தெரியுமா? இவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கா? இதோ பாருங்க!

HT Explainer : கோவாவில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் பற்றி தெரியுமா? இவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கா? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Apr 21, 2023 09:10 AM IST

Goa Festivals : கோவாவில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் பற்றியும் சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி இதில் தெரிந்து கொள்ளுங்கள்.

கோவாவில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்
கோவாவில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவா, வடக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு ,மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு இடம் கோவா. குறைவான பரப்பளவையும் குறைவான மக்கள் தொகையையும் கொண்டு இந்தியாவின் மிகச்சிறிய நான்காவது மாநிலமாக கோவா விளங்குகிறது.

இந்தியாவின் சுற்றுலாத் தலைநகராகவும் அதிக கனிம வளங்களைக் கொண்ட மாநிலமாகவும் கோவா திகழ்கிறது. இங்கு, கொங்கனி, மராத்தி, போர்த்துக்கீசிய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பான்மையாக இந்துக்களும், அதற்கடுத்தாக கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும், கணிசமாக இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தவர்களும் வாழ்ந்து வருகிறார்கள்.

கோவாவின் திருவிழா (Carnival in Goa) எனப்படுவது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு சிறிய கேளிக்கை கொண்டாட்டமாகும். இதுபோன்ற பல திருவிழாக்கள் கோவாவில் கொண்டாடப்படுகிறது. அதுகுறித்து இதில் காண்போம்.

கார்னிவல்(Carnival in Goa)

கோவாவில் நடைபெறும் இக்கொண்டாட்டம் இந்தியாவில் மிகப்பெரிய ஒரு நிகழ்வாகும். ஆசியாவில் நடைபெறும் சில விழாக்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் இக்கொண்டாட்டம் வழக்கமாக நடைபெறுகிறது. விழாவுக்கு முன்னர் இந்நிகழ்வை கார்னிவல் என அழைத்தனர்.

கோவாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான பனாஜியில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. மொத்தம் மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழா ஆடல், பாடல், வண்ணமயமான அலங்கார ஊர்திகளின் ஊர்வலங்கள் என்று களைகட்டுகின்றன.

மோமோ என்ற லத்தின் அமெரிக்க அரசனின் காலத்தில் தான் இதுபோன்ற கார்னிவல் கொண்டாட்டங்கள் துவங்கியிருக்கின்றன. அதை நினைவுகூரும் பொருட்டு ஒவ்வொரு கார்னிவல் திருவிழாவின் போதும் மோமோ அரசனாக ஒருவர் வேடமிட்டு இந்த கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார்.

கோவாவில் போர்த்துகீசிய ஆட்சி 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு முடிவுக்கு வந்த பின்னர் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிராமிய அடிப்படையிலான இத்திருவிழாவில் சில சமயங்களில் பெருமளவில் நகரமக்களும் அணிவகுத்து கலந்து கொள்கின்றனர்.

வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கலைக்குழுக்கள் இக்கொண்டாட்டத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. இன்று வரை இக்கொண்டாட்டம் பாரம்பரிய முறைப்படி திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் வருடாவருடம் நடக்கும் கார்னிவல் திருவிழாவை போன்றது தான் இந்த கோவா கார்னிவல் திருவிழாவும்.

இந்தியாவில் வேறு எங்கும் இந்த வகையான திருவிழா இல்லை. இந்த விழா 500 ஆண்டுகள் பழமையானது. இது கத்தோலிக்கர்களுக்கு மிகவும் முக்கியமான பண்டிகையாகும். வண்ணமயமான ஆடைகள், மனதைக் கவரும் இசை, ஆடம்பரமான நடனங்கள், வண்ணமயமான உடைமைகள் மற்றும் சுற்றியுள்ள மக்களின் அன்பும் உற்சாகமும் உங்கள் நாளை மறக்கமுடியாததாக மாற்றும்.

கோவா கார்னிவல் கோவாவின் மிகவும் பிரபலமான திருவிழா. வண்ணமயமான தெருக்கள் மற்றும் மிதவைகள் திருவிழாவில் மக்களின் மகிழ்ச்சியை எதிரொலிக்கின்றன. தெற்கு கோவாவில் உள்ள சால்சீட் துணை மாவட்டத்தில் மேடைகள் அமைத்தும் தெருவோரங்களிலும் நாடகங்கள் நடத்தப்பட்டு இக்கொண்டாட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. 

இத்திருவிழா கோவாவின் மிகவும் புகழ்பெற்ற திருவிழா என்று கோவா அரசாங்கத்தின் சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது. மேலும், 18ஆம் நூற்றாண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழா நடைபெறும் மூன்று நாட்களும் 24மணிநேரமும் தெருக்களில் மக்கள் கூடி ஆடிப்பாடி குடித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். சிறியவர், பெரியவர் என்ற வயது வித்தியாசமின்றி அனைவரும் இந்த கார்னிவலில் கலந்துகொள்ளலாம்.

கார்னிவல் திருவிழாக்கள் கொண்டாடுவது போர்துகீசியர்களின் பண்பாடு ஆகும். உலகில் எங்கெங்கெல்லாம் போர்துகீசியர்களின் காலனி ஆதிக்கம் இருந்ததோ அந்த இடங்களிலெல்லாம் கார்னிவல்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன. இந்த வழக்கம் 800ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சாவோ ஜோவாவின் திருவிழா (Sao Joao Festival)

கோவாவில் கொண்டாடப்படும் கத்தோலிக்கப் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த திருவிழா புனித ஜான் பாப்டிஸ்டுக்கு அஞ்சலி செலுத்துகிறது. இந்த திருவிழாவில் கிராமவாசிகள் நீரோடைகள், கிணறுகள் மற்றும் குளங்களில் குதிப்பார்கள்.

அனைவரும் கோபல் பூக்கள் மற்றும் இலைகளால் ஆன கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்டவர்கள், நடனம், இசை மற்றும் கோவா உணவு ஆகியவை சாவோ ஜோவாவின் திருவிழாவை சிறந்ததாக ஆக்குகின்றன.

ஷிக்மோ திருவிழா (Shigmo Festival)

ஷிக்மோ திருவிழா ஆன்மாவை அமைதிப்படுத்தும். இது மகிழ்ச்சியான வசந்த காலத்தை வரவேற்க கொண்டாடப்படுகிறது. ஷிக்மோ திருவிழா கோவா பாரம்பரியங்களை பற்றி தெரிந்துகொள்ள சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

இது கோவாவில் மிகவும் பிரபலமான கலாச்சார விழாக்களில் ஒன்றாகும். வண்ணமயமான ஆடைகளில் நாட்டுப்புற நடனங்கள், பிராந்திய புராணங்களை சித்தரிக்கும் கோபா மற்றும் புகாடி ஃப்ளோட் அணிவகுப்புகள் போன்றவை இந்த கண்கவர் வண்ணமயமான திருவிழாவின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.

'ஸ்பிரிட் ஆஃப் கோவா'(‘Spirit of Goa’)

கோவா சுற்றுலாத் துறையானது தேங்காய் மற்றும் முந்திரி பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்களை கொண்டு 'ஸ்பிரிட் ஆஃப் கோவா' திருவிழாவை நடத்துகிறது. ஏப்ரல் 21-23 வரை இந்த திருவிழா நடைப்பெறும்.

தெற்கு கோவாவில் உள்ள கோல்வா கடற்கரையில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வில் தேங்காய் மற்றும் முந்திரி பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான பொருட்கள், உணவு வகைகள், பானங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள், வீட்டில் வளர்க்கப்படும் ஃபெனி மற்றும் யூராக் போன்றவற்றை காட்சிக்கு வைக்கப்படும்.

கோவாவின் மிகவும் விரும்பப்படும் பாரம்பரியக் கஷாயமான ஃபெனிக்கு முந்திரி மற்றும் தேங்காய் சாறு காய்ச்சுவது குறித்த நேரடி டெமோக்கள் இருக்கும்.

முந்திரி ஸ்டம்பிங் போட்டியுடன் மாஸ்டர் வகுப்புகள் மற்றும் புகழ்பெற்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் சமையல் கலைஞர்களால் நடத்தப்பட்ட சமையல் செயல்விளக்கங்கள் இருக்கும். இதன் மூலம் உண்மையான கோவா உணவு வகைகள் காட்சிப்படுத்துகின்றன.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்