தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Us Cosulate : அமெரிக்காவில் படிக்க தயாராகுங்கள்! மே மாத மத்தியில் மாணவர் விசா செயல்முறைகள் துவங்கும் - தூதரகம் அறிவிப்பு

US Cosulate : அமெரிக்காவில் படிக்க தயாராகுங்கள்! மே மாத மத்தியில் மாணவர் விசா செயல்முறைகள் துவங்கும் - தூதரகம் அறிவிப்பு

Priyadarshini R HT Tamil
May 02, 2023 10:35 AM IST

Study in United States : மே மாதத்தின் மத்தியில் முதல் பேட்ச் மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் செயல்முறையை துவங்க அமெரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த கல்வியாண்டுக்கான மாணவர் விசாக்கள் அப்போது செயல்படுத்தப்படும். மே மாத மத்தியில் விசா அமர்த்தங்கள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

விசா நியமனங்களுக்காக காத்திருப்பது செய்திகளில் வெளிவந்தது. ஆனால் அதெரிக்கா மாணவர்கள் மற்றும் பணி விசாக்களை செயல்முறைப்படுத்துவது மற்றும் முன்னுரிமை கொடுப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தாண்டு சீசனுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் விசாவை வழங்குவதில் பைடன் அரசு அக்கறை காட்டி வருவதாக, தூதரக அலுவலர் தெரிவித்தார்.

அமெரிக்கா, 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை விசா தள்ளுபடி திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது. அது சில மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், குறுகியகால ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தனிநபர் நேர்முகம் தேர்வுக்காக இந்த சலுகை செய்துள்ளது. இவர்கள் அனைவரும் அவர்கள் நாட்டில் விசா விண்ணப்பிப்பதில் சில நிபந்தனைகளை எதிர்கொள்கிறார்கள்.

இந்த திட்டத்தில் தூதரக அலுவலர்கள், விசா நேர்முகத்தேர்வை, முதல் முறை அல்லது புதுப்பிக்கும் எஃப், எம் மற்றும் அகாடமிக் ஜே விண்ணப்பதாரர்கள் முன்னதாக எந்த வகை விசாவை வைத்திருந்தாலும், தள்ளுபடி செய்ய முடியும்.

விசா தள்ளுபடி திட்டத்தில் பங்குபெறும் நாட்டிலிருந்து விண்ணப்பிக்கும் மேற்கூரிய வகை விசா விண்ணப்பதாரர்கள் அனைவரின் விசாவுக்கு நேர்முக தேர்வு தள்ளுபடி செய்யப்படும். அதற்கு அவர்கள் முன்னதாக எலெக்ட்ரானிக் சிஸ்டம் டிராவல் ஆத்தரைசேசன் மூலம் அமெரிக்காவுக்கு பயணித்தவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தகுதியில்லாத நபர்களாக மட்டும் இருக்கக்கூடாது.

விசா விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்பங்களை அதே வகையில் 48 மாதத்தில் புதுப்பிக்க விரும்பினால், முந்தைய விசாவின் காலவதி கூட நேர்முக தேர்வை தள்ளுபடி செய்வதற்கான தகுதியாகும்.

தூதரக அதிகாரிகள் இருந்தும் தனிநபர் நேர்முகத்தேர்வை ஒவ்வொருவருக்கும் உள்ளூர் நிலையைப்பொறுத்து நடத்துவார்கள். நீங்கள் தூதரக வலைதங்கள் மற்றும் இணையதளங்களில் அவ்வப்போது பரிசோதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நாங்கள் விண்ணப்பதாரர்களை கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான் அன்றைய நிலவரம் மற்றும் சேவைகளை அவர்கள் தெரிந்துகொள்ள முடியும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்