Fact Check: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு கட்டணமா?-டிராய் உத்தரவு பிறப்பித்ததா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு கட்டணமா?-டிராய் உத்தரவு பிறப்பித்ததா?

Fact Check: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு கட்டணமா?-டிராய் உத்தரவு பிறப்பித்ததா?

News checker HT Tamil
Jun 18, 2024 01:48 PM IST

TRAI: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு டிராய் கட்டணம் விதிக்க இருப்பதாக செய்தி ஒன்று வைரலாகியது. பல்வேறு ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டிருந்தன.

Fact Check: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு கட்டணமா?-டிராய் உத்தரவு பிறப்பித்ததா?
Fact Check: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு கட்டணமா?-டிராய் உத்தரவு பிறப்பித்ததா?

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் செய்தி போலியானது என்று TRAI விளக்கமளித்துள்ளது.

ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு டிராய் கட்டணம் விதிக்க இருப்பதாக செய்தி ஒன்று வைரலாகியது. பல்வேறு ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டிருந்தன.

சமூக வலைத்தளங்களில் காரசார விவாதம்

“நெக்ஸ்ட்… “ஒரே மனைவியுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும்” அதானே..?” என்றெல்லாம் பலரும் இந்த செய்தியை ஷேர் செய்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு களத்தில் இறங்கியது.

ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு டிராய் கட்டணம் விதிக்கவுள்ளதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் அக்குழு ஈடுபட்டது.

ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இந்தச் செய்தி பரவிய நிலையில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI இதுகுறித்த விளக்கத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் அளித்துள்ளது.

அதன்படி, ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தும் நபருக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் எண்களை பயன்படுத்துபவர்களுக்கும் கட்டணம் என்பதாகப் பரவிய தகவல் பொய்யானது என்று விளக்கமளித்துள்ளது டிராய்.

”The speculation that TRAI intends to impose charges on customers for holding multiple SIMs/ numbering resources is unequivocally false. Such claims are unfounded and serve only to mislead the public.” என்று TRAI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், செல்போன் எண்கள் குறித்து பரவிய செய்தி போலியானது என்பது தெளிவாகிறது.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் newschecker இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) என்பது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 இன் பிரிவு 3 இன் கீழ் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டாளராகும். இது ஒரு தலைவர் மற்றும் இரண்டு முழு நேர உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் உள்ளனர். TRAI சட்டமானது, 24 ஜனவரி 2000 முதல் நடைமுறைக்கு வரும் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டது, TRAI யிடமிருந்து தீர்ப்பு மற்றும் தகராறுகள் செயல்பாடுகளை மேற்கொள்ள தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை நிறுவுகிறது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிறுவப்பட்டது. முன்னதாக, தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது மத்திய அரசின் மேற்பார்வையில் இருந்தது.

TRAI இன் நோக்கம், இந்தியாவில் தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்கி வளர்ப்பதே ஆகும், இது வளர்ந்து வரும் உலகளாவிய தகவல் சமூகத்தில் நாடு ஒரு முன்னணி பங்கைக் கொண்டிருக்க உதவுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.