தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Donald Trump: டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி தான் - நீதிமன்றம் அதிரடி

Donald Trump: டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி தான் - நீதிமன்றம் அதிரடி

Suriyakumar Jayabalan HT Tamil
May 10, 2023 10:30 AM IST

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கு ஒருபுறம் இருக்க மற்றொரு வழக்கில் நீதிமன்றம் இவரது குற்றத்தை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பல மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கவும் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1996 ஆம் ஆண்டு பத்திரிக்கை எழுத்தாளர் ஈ ஜின் கரோலை டொனால்ட் டிரம்ப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் தற்போது நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு இழப்பீடாக மூன்று மில்லியன் டாலர் டிரம்ப் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் பாலியல் வன்கொடுமையில் அவர் ஈடுபட்டார் என்பதை ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பில், ஈ ஜீன் கரோலுக்கு மூன்று மில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதில் 2.7 மில்லியன் டாலர் இழப்பீடாகவும், 2 லட்சத்து 80 ஆயிரம் டாலர் தண்டனை செலவாகும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் நடுவர் மன்ற விவாதத்தின் போது முதல் நாளில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. விசாரணையின் போது டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவில்லை. இருந்த போதும் கரோலை ஒருபோதும் நான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவில்லை, அவரைப் பற்றி எனக்குத் தெரியாது என டிரம்ப் வலியுறுத்தி இருந்தார்.

தற்போது நீதிமன்றம் கொடுத்துள்ள இந்த தீர்ப்பானது தனக்கு மிகப்பெரிய அவமானம் எனத் தனது சமூக ஊடக பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்