தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Congress Loses Rajya Sabha Polls From Himachal, Cm Sukhu Says Six Party Mlas Sold Their Honesty

Himachal Pradesh: பாஜகவுக்கு தாவிய எம்.எல்.ஏக்கள்! இமாச்சலில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்?

Kathiravan V HT Tamil
Feb 27, 2024 09:47 PM IST

”மாற்றி வாக்களித்த "ஒன்பது நபர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளனர்”

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு
இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில் 40 இடங்களை கைப்பற்றி ஆட்சியில் உள்ளது. 3 சுயேச்சை வேட்பாளர்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக உள்ள நிலையில், 25 எம்.எல்.ஏக்கள் உடன் பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்களும், 3 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் மாற்றி வாக்களித்ததால்  காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வி அடைந்துள்ள சம்பவம் அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ்க்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  

பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் மற்றும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இருவரும் தலா 34 வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டார்.

பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சிங்வி, தோல்வியை ஒப்புக்கொண்டார். மாற்றி வாக்களித்த எம்.எல்.ஏக்கள், தனக்கு நிறைய படிப்பினையை கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.  

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு,  மாற்றி வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் "தங்கள் நேர்மையை விற்றுவிட்டதாக" குற்றம் சாட்டினார். கேள்விகளுக்கு பதிலளித்த அவர், சட்டமன்றத்தில் அதன் பெரும்பான்மைக்கு எந்தவொரு சவாலையும் கட்சி சமாளிக்கும் என கூறினார். 

ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தனது போட்டி வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு வாழ்த்து தெரிவித்த சிங்வி, சட்டசபையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாதபோது மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தியதற்காக பாஜகவை கடுமையாக விமர்சித்தார். 

வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எனது வாழ்த்துக்களுக்கு உரியவர். அவரது கட்சியினர் சுயபரிசோதனை செய்து சிந்திக்க வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன். 43 உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு எதிராக 25 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி வேட்பாளரை நிறுத்தும்போது, சட்டத்தால் அனுமதிக்கப்படாத ஒன்றை வெட்கமின்றி செய்வோம் என பாஜக செய்துள்ளது என சிங்வி குற்றம்சாட்டினார்.  

மாற்றி வாக்களித்த "ஒன்பது நபர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளனர்.  என கூறினார். 

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கூடும் என்ற ஊகங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சட்டசபையில் பெரும்பான்மை முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் சுகு கூறினார். 

IPL_Entry_Point