தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  தமிழர் கலாச்சரத்தை பறைசாற்றும் விமான நிலைய புதிய முனையம் - பிரதமர் மோடி திறப்பு

தமிழர் கலாச்சரத்தை பறைசாற்றும் விமான நிலைய புதிய முனையம் - பிரதமர் மோடி திறப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 06, 2023 01:51 PM IST

Chennai Airport New Terminal: சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனைய கட்டிடத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 8ஆம் தேதி திறந்து வைக்கிறார். அந்த கட்டிடத்தின் கண்கவர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கும் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம்
பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கும் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த புதிய முனையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தில் பயணிகளை கையாளும் திறன் ஆண்டுக்கு 23 மில்லியன் என்பதில் இருந்து 30 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வண்ணமயமான இண்டீரியர் லுக்கில் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்
வண்ணமயமான இண்டீரியர் லுக்கில் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தமிழ் கலாச்சரத்தை பிரதிபலிக்கும் விதமாக ஓவியங்களும், புகைப்படங்களும் சுவர்களில் இடம்பிடித்திருப்பதோடு கண்களுக்கு குளிர்ச்சியான வண்ணங்களுடன் கட்டிடம் இண்டீரியர் பகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் பாரம்பரிய கோலங்கள், சேலை, கோயில்கள் மற்றும் முக்கிய சுற்றுலாதலங்களின் அழகை வெளிப்படுத்தும் இயற்கை காட்சிகளும் வரையப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரம் ஓவியம்
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரம் ஓவியம்

வரும் 8ஆம் தேதி நாட்டின் 10வது வந்தே பாரத் ரயில் சேவையான சென்னை - கோவை இடையிலான ரயில் சேவையை தொடங்கி வைக்க வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தின் இந்த புதிய முனைய கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.

அத்துடன் தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை செல்லும் புதிய ரயில் சேவையும் தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர் ரூ. 294 கோடி மதிப்பில் திருத்துறைபூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையிலான 37 கிமீ தொலைவு முடிக்கப்பட்டுள்ள அகல பாதையா அர்பணிக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பிரதமர் மோடி தனது தமிழ்நாடு வருகையின்போது மதுரை தல்லாக்குளம் - நத்தம் இடையிலான மாநிலத்தில் மிகவும் நீளமான மேம்பாலமான நத்தம் எக்ஸ்பிரஸ்வே பாலத்தையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார்.

IPL_Entry_Point