தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Womans Divorce Photoshoot: விவாகரத்தை இப்படியும் கொண்டாடலாமா; அமெரிக்க பெண்ணின் புது முயற்சி!

Womans Divorce Photoshoot: விவாகரத்தை இப்படியும் கொண்டாடலாமா; அமெரிக்க பெண்ணின் புது முயற்சி!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 27, 2023 11:22 AM IST

America: அமெரிக்காவில் வித்தியாசமான முறையில் பெண் ஒருவர் தனது திருமண உடையை தீ வைத்து எரித்து போட்டோ ஷுட் நடத்தி உள்ளார்.

விவாகரத்தை கொண்டாடிய பெண்
விவாகரத்தை கொண்டாடிய பெண்

ட்ரெண்டிங் செய்திகள்

போட்டோஷுட் என்பது இன்றைய இளம் தலைமுறையிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு காலத்தில் மிகப்பெரிய நடிகர், நடிகைகள் மட்டுமே அதிக அளவில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டனர். ஆனால் தற்போது திருமணத்திற்கு முன்பே ப்ரீ வெட்டிங் ஷுட், வெட்டிஷுட், பின்னர் வளைகாப்பு, கர்பிணி பெண்கள் போட்டோ ஷுட் என்று போட்டோக்களை எடுப்பதில் தம்பதியினர் அதிக ஆர்வம் காட்டு கின்றனர். இதேபோல் தங்கள் குழந்தைகளையும் அதிக ஆர்வத்துடன் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். அந்த வகையில் மனிதர்கள் தங்களது சின்னச்சின்ன சந்தோசங்களைப் புகைப்படமாக்கி இறுதி வரை அந்த படங்களை பார்த்து மகிழ விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்காவில் வித்தியாசமான முறையில் பெண் ஒருவர் தனது திருமண உடையை தீ வைத்து எரித்து போட்டோ ஷுட் நடத்தி உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த லாரன் புரூக் என்ற பெண்ணிற்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் சுமூக உறவு இல்லாததால் தொடர்ந்து பிரச்சனை நடந்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண பந்ததத்திற்கு பிறகு செப்டம்பர் 2021ல் கணவரிடமிருந்து பிரிந்தார்.

இதையடுத்து இந்த ஜனவரியில் லாரன் புரூக்கிற்கும் அவரது கணவருக்கும் சட்டப்படி விவாகரத்து முடிந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் லாரன் புரூக் மேற்கொண்ட போட்டோ ஷூட் ஒன்றில், அவரது திருமண புகைப்படத்தைக் கிழித்ததுடன் திருமண ஆடையை தீயில் எரித்து விவகாரத்தை கொண்டாடியுள்ளார்.

இது குறித்து லாரன் புரூக் கூறியதாவது, விவாகரத்து என்பது கடினமானது மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேதனையானது என்ற உண்மையை காட்டுவதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்