தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bsnl: 5ஜி சேவை...பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு டபுள் ட்ரீட்!

BSNL: 5ஜி சேவை...பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு டபுள் ட்ரீட்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 06, 2023 01:39 PM IST

உலகத் தரம் வாய்ந்த 4ஜி சேவையை பிஎஸ்என்எல் சேவையை கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவித்த நிலையில், 5ஜி சேவையையும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவை மற்றும் 5ஜி சேவை விரைவில் அறிமுகம்
பிஎஸ்என்எல் மேம்படுத்தப்பட்ட 4ஜி சேவை மற்றும் 5ஜி சேவை விரைவில் அறிமுகம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக பிஎஸ்என்எல் மனிதவள மேம்பாடு இயக்குநர் அரவிந்த் வந்நெர்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூரியதாவது: "இன்னும் ஓர் ஆண்டுக்குள் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 4ஜி மேம்படுத்தப்பட்ட சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதேபோல் விரைவில் 5ஜி சேவையும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

பிஎஸ்என்எல் செறிவூட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 28 ஆயிரம் கிராம பகுதிகளில் 4ஜி மேம்படுத்தப்பட்ட திட்டம் செயல்படவுள்ளது. இதில் மொபைல் சேவையே இல்லாத கிராமங்களும் இடம்பெறுகிறது. மகராஷ்ட்ரா மாநிலத்தை பொறுத்தவரை 4,900 கிராமங்கள் இந்த சேவை நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த சேவை செயல்படுத்துவதற்கான நிதியை ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் சார்பில் நிகழ்த்தப்படும் இந்த மாற்றம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் நல்ல வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 2026-27ஆம் நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் நிகர லாபத்தை பெறும்"

இவ்வாறு அவர் கூறினார்.

IPL_Entry_Point