BookMyShow: கோல்ட் ப்ளே டிக்கெட் விற்பனை - தொடங்கியதும் முடங்கிய புக் மை ஷோ - சரியானவுடன் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்-book my show halts as gold play tickets go on sale and fans getting frustrated - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bookmyshow: கோல்ட் ப்ளே டிக்கெட் விற்பனை - தொடங்கியதும் முடங்கிய புக் மை ஷோ - சரியானவுடன் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்

BookMyShow: கோல்ட் ப்ளே டிக்கெட் விற்பனை - தொடங்கியதும் முடங்கிய புக் மை ஷோ - சரியானவுடன் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்

Marimuthu M HT Tamil
Sep 22, 2024 02:45 PM IST

BookMyShow: கோல்ட் ப்ளே டிக்கெட் விற்பனை - தொடங்கியதும் முடங்கிய புக் மை ஷோ - சரியானவுடன் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள் குறித்து பார்க்கலாம்.

BookMyShow: கோல்ட் ப்ளே டிக்கெட் விற்பனை - தொடங்கியதும் முடங்கிய புக் மை ஷோ - சரியானவுடன் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்
BookMyShow: கோல்ட் ப்ளே டிக்கெட் விற்பனை - தொடங்கியதும் முடங்கிய புக் மை ஷோ - சரியானவுடன் விற்றுத்தீர்ந்த டிக்கெட்கள்

அடுத்த ஆண்டு மும்பையில் ஜனவரி 18 மற்றும் 19ஆம் தேதி தொடங்கும், ‘’கோல்ட் பிளே'' கச்சேரிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியவுடன், புக் மை ஷோ இணையதளம் மற்றும் அதனின் செயலி ஆகியவை முடங்கியது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

பிரிட்டிஷ் இசைக்குழு ’கோல்ட் பிளே(ColdPlay)’ என்பது 1997ஆம் ஆண்டு இயங்கி வரும் இசைக்குழுவாகும். இந்தக் குழுவில் பாடகர் கிறிஸ் மார்டின், கிடார் கலைஞர் ஜானி பக்லேண்ட் மற்றும் இசைக்கலைஞர்களான கை பெர்ரிமேன், டிரம்ஸ் வாசிக்கும் வில் சாம்பியன் ஆகியோர் இருக்கின்றனர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், மும்பையின் டி.ஒய்.மைதானத்தில் ‘கோல்ட் பிளே’ இசைக்குழு நிகழ்ச்சி நடத்தவுள்ளது.  

இதற்காக இன்று செப்டம்பர் 22ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் அதிகமானோர், டிக்கெட் புக்கிங்கில் ஈடுபட முயன்றபோது, புக் மை ஷோ இணையதளம் மற்றும் அதன் செயலி ஹேங் ஆகி நின்றது. 

கோல்ட்ப்ளே இசைக்கச்சேரி: முடங்கிய இணையதளத்தால் விரக்தியை வெளிப்படுத்திய நெட்டிசன்கள்:

இந்த விரக்தியை கோல்ட் ப்ளே இசைக்குழுவின் ரசிகர்கள் பலரும், தங்களது எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்தினர். குறிப்பாக, விஷால் வர்மா என்னும் எக்ஸ் தளப் பயனர், தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "இந்தியர்கள் ஒவ்வொரு முறையும் கோல்ட்ப்ளே மற்றும் வேறு எந்த முக்கிய நிகழ்வுக்கும் புக் மை ஷோவில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், அது மீண்டும் செயலிழந்து நொறுங்கிப் போச்சு" எனத் தெரிவித்தார். 

மற்றொரு பயனர் விரக்தியைப் படம்பிடிக்கும் ஒரு மீமைப் பகிர்ந்திருந்தார். அதில், இந்தியாவில் முக்கிய டிக்கெட் விற்பனையின்போதெல்லாம் மீண்டும் மீண்டும் ஏற்படும் இணையதள முடக்கத்தைப் பற்றி பேசியது. 

மற்றவர்கள் நகைச்சுவையுடன் மனநிலையை இலகுவாக்க முயன்றனர். ஐஸ்னா அகர்வால் என்னும் எக்ஸ் தளப் பயனர்,  "என்ன? இந்த கூட்டத்தில் நான் எப்படி டிக்கெட்களை வாங்கப்போகிறேனோ, ஹாஹாஹா. புக் மை ஷோவில், கோல்ட்ப்ளே இந்தியா டிக்கெட்டுகளை இன்று என்னால் வாங்க முடியவில்லை. அந்தப் பிரச்னை தொடர்கிறது"என்றார். 

மீண்டும் டிக்கெட்டுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்:

புக் மை ஷோ வலைத்தளம் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக பின்னர் புதுப்பிப்புகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஆனால், நிறைய ரசிகர்கள் முன்பதிவுக்காக காத்திருந்தனர். இது கோல்ட் ப்ளே டிக்கெட்டுகளை பெற முயற்சிக்கும் ரசிகர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. சில பயனர்கள் நீண்ட காத்திருப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மைகளைப் பற்றி வேதனை தெரிவித்தனர். 

குழப்பத்திற்கு மத்தியில்,  புக் மை ஷோ(BookMyShow) இணையதளத்துக்கு ஆலோசனை ஆன்லைனில் பரவத் தொடங்கியது. ஒரு பயனர் பரிந்துரைத்ததாவது, "நீங்கள் கோல்ட்ப்ளே டிக்கெட்டுகளுக்கான காத்திருப்பில் இருந்தால், அந்த இணையதளம் மெதுவாக செல்கிறது என்றால், உங்கள் பக்கத்தைப் புதுப்பிக்கவும். சீக்கிரம் நடக்கும்"என்று பதிவிட்டிருந்தார். 

கவுட் மாக்ஸ் என்ற மற்றொரு எக்ஸ் பயனர், நான்கு வெவ்வேறு கணக்குகளில் 16 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிந்தது என்று பெருமையுடன் பகிர்ந்து கொண்டார். மேலும், வெற்றியைக் கொண்டாடி, "வாங்க போகலாம் கோல்ட் ப்ளேக்கு’’ என்றார். 

இந்த பிரச்னை தொடர்பாக புக் மை ஷோ நிறுவனம் விளக்கமளித்தது. அதில், "நாங்கள் உங்களைக் கேட்டோம், ஒவ்வொரு ரசிகரும் நிகழ்ச்சியை அனுபவிக்க டிக்கெட்டுகள் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பைப் பெற விரும்புகிறோம். ஒரு பயனர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அதிகபட்சம் 4 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்’’ எனத் தெரிவித்தது. 

அதன்பின், மீண்டும் புக் மை ஷோ சரிசெய்யப்பட்டு தொடங்கிய கோல்ட் ப்ளே டிக்கெட் விற்பனை, சரியானவுடன் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன.

முன்னதாக, “மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ் வேர்ல்ட் டூர்”-க்கு டிக்கெட் முன்பதிவு, கடந்த 10ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து உலகளவில் 2022 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றுள்ளது. வரவிருக்கும் நிகழ்ச்சிகள் அபுதாபி, சியோல் மற்றும் ஹாங்காங்கிலும் திட்டமிடப்பட்டுள்ளன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.