Maggie Cutlet Recipe: எக்ஸ்ட்ரா மேகிய வச்சு ஈஸியா கட்லட் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்!-how to make cutlet from maggie noodles - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Maggie Cutlet Recipe: எக்ஸ்ட்ரா மேகிய வச்சு ஈஸியா கட்லட் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்!

Maggie Cutlet Recipe: எக்ஸ்ட்ரா மேகிய வச்சு ஈஸியா கட்லட் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்!

Suguna Devi P HT Tamil
Sep 21, 2024 12:41 PM IST

Maggie Cutlet Recipe: சில சமயங்களில் நாம் விரும்பி சாப்பிடும் உணவுகளும் நமக்கு சலிப்பு உண்டாக்கி விடும். அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக கருதப்படும் மேகியை வைத்து வித விதமான உணவுகள் செய்யலாம்.

Maggie Cutlet Recipe: எக்ஸ்ட்ரா மேகிய வச்சு ஈஸியா கட்லட் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்!
Maggie Cutlet Recipe: எக்ஸ்ட்ரா மேகிய வச்சு ஈஸியா கட்லட் செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்!

தேவையான பொருட்கள் 

எக்ஸ்ட்ரா மேகி பாக்கெட் ஒன்று, ஒரு பெரிய வெங்காயாம், சிறிதளவு மிளகாய் தூள், 1 டீஸ்பூன் கறிமசாலா தூள், 1 கப் சோள மாவு, சிறிதளவு கொத்தமல்லி தலை. அரை எலும்பிச்சை மற்றும் தேவாயான அளவு உப்பு ஆகியவற்றை சரியான அளவில் எடுத்தக் கொள்ள வேண்டும்.  வீட்டில் இருக்கும் சமயங்களில் குழந்தைகளுக்கு ஈஸியாக செய்ய இது ஒரு சிறந்த ரெஸிபி ஆகும். 

 செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு பாக்கெட் அளவுள்ள மேகியை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். ஒரு சிட்டிகை அளவுள்ள உப்பு சேர்க்க வேண்டும். அரை வேக்காடாக இருகக்கும் போது அதை எடுத்து வடிகட்ட வேண்டும். பின்னர் அதனை சிறிது நேரம் ஃபேன் காற்றில் உலர விட வேண்டும். 

உலர வைத்த மேகியை ஒரு கடயாயில் போட்டு எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும்.  பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்து மேகியுடன் போட வேண்டும். அதனுடன் கொத்தமல்லியை நறுக்கி போட வேண்டும். சிறிது எலும்பிச்சை சாறை பிழிந்து விட வேண்டும். இந்த கலவையில் மேலும் மிளகாய் பொடி, கரி மசாலா பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.   

கட்லட் கலவை 

மேலே உள்ளவாறு கட்லட் செய்யத் தேவையான கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும்.  இந்த கலவையுடன் சோள மாவை சேர்த்து சிறு சிறு துண்டுகளாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக மொறு மொறுப்பாக வேண்டும் என்றால், நான்கு பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த பிரட் தூளில் கட்லட் செய்ய தட்டி வைத்த கலவையை முக்கி பின்னர் பயன்படுத்த வேண்டும். இறுதியாக ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு  காய விட வேண்டும். நல்ல கோதி நிலையில் கட்லட் கலவையை போட்டு 2 நிமிடங்கள் வரை வேக விட்டு பின்னர் எடுக்கவும். சுவையான, சூடான மொறு மொறு மேகி கட்லட் ரெடி. பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்றாக விரும்பி சாப்பிடுவார்கள். 

இந்த மேகி கட்லட் செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும். குறைந்த நேரத்தில் செய்ய முடிவதால் ஹோம் மேக்கர்களுக்கு இது ஒரு சிறப்பான ரெசிபி ஆகும். நீங்களும் உங்க வீட்டில் செஞ்சு பாருங்க. 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.