தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  India Bloc Likely To Meet In Delhi On Dec 6 Strategy For Ls Polls

Election Results 2023: '3 மாநிலத்தில் படுதோல்வி.. இண்டியா கூட்டணி கூட்டத்திற்கு காங்., அழைப்பு!

Karthikeyan S HT Tamil
Dec 03, 2023 12:53 PM IST

மக்களவை தேர்தலையொட்டி எதிர்க்கட்சி கூட்டணி கூட்டுப் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் (கோப்புபடம்)
இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

வரும் மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிசம்பர் 6ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருப்பதாகவும், கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இண்டியா கூட்டணியின் இந்தக் கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி வகுக்க வேண்டிய வியூகங்கள் குறித்து முடிவு எடுக்கவும், எதிர்க்கட்சி கூட்டணி கூட்டுப் பேரணிகளை நடத்துவது குறித்தும் முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 'இந்தியா' Indian National Democratic Inclusive Alliance. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் மும்பையில் அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்